ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு தேர்வு வாரியம் அறிவிப்பு | ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 கடந்த (ஏப்ரல்) மாதம் நடைபெற்றது. தாள்-1 தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர்களும், தாள்-2 தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர்களும் எழுதினார்கள். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுதாள்-1, தாள்-2 க்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளன. இந்த தற்காலிக விடைகளின் மீது தேர்வர்கள் ஏதாவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் வருகிற 27-ந்தேதி மாலை 5-30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தபால் மூலமாகவோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே ஏற்கப்படும். கையேடுகள் மற்றும் தொலை தூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2017 TENTATIVE KEY KEY ANSWER DISPUTE - FORMAT CLICK HERE - USE SEPEARTE FORMAT FOR EACH KEY ANSWER DISPUTE - PAPER I CLICK HERE - USE SEPEARTE FORMAT FOR EACH KEY ANSWER DISPUTE - PAPER II | |
Dated: 22-05-2017 |
|
No comments:
Post a Comment