SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, November 14, 2016

பொது அறிவு - வினா வங்கி

பொது அறிவு - வினா வங்கி
1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது?
2. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் உருவான முதல் நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்ன?
3. பாரத மிகுமின் நிறுவனம் புதிய நிலக்கரி அனல்மின் நிலையத்தை எங்கு நிறுவி உள்ளது?
4. தேசிய தடுப்புமருந்து தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
5. ஆசிய கபடி சாம்பியன் ஷிப்-2016 கோப்பையை வென்ற நாடு எது?
6. கடற்படையின் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளவர் யார்?
7. ஜார்ஜியாவைச் சேர்ந்த 'புலிட்சர்' பரிசு வென்ற இசையமைப்பாளர் சமீபத்தில் காலமானார், அவரது பெயர் என்ன?.
8. சர்வதேச கால்பந்து கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?.
9. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
10. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், சமையல் எரிவாயு மானியம் பெறும் திட்டத்தின் பெயர் என்ன?
11. விமான கடத்தல் தடுப்பு மசோதா எப்போது நிறைவேற்றப்பட்டது?
12 உலக பத்திரிகை சுதந்திர தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
13. 2016 ஆண்டுக்கான காமன்வெல்த் சிறுகதை மண்டல பரிசு பெற்றவர் யார்?
14. சவ்ரியா ரோந்துக் கப்பல் எந்த கப்பல்தளத்தில் தயாரிக்கப்பட்டது?
15. இந்தியாவின் பசுமைப்பள்ளி எங்குள்ளது?
16. 'இந்தியன் பேப்பர் மணி' என்ற நூலை எழுதியவர் யார்?
17. பல்கலைக்கழகங்களில் யோகா கல்வியை பயிற்றுவிப்பதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி எது?.
18. பாகிஸ்தானின் கிரிக்கெட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மிக்கி ஆர்தர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
19. இந்திய புனித தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக விடப்பட்டுள்ள சிறப்பு ரெயிலின் பெயர் என்ன?
20. செவ்வாய் வளிமண்டல அடுக்கில் ஆக்சிஜன் அணுக்கள் இருப்பதை உறுதி செய்த ஆய்வுத்திட்டம் எது?

விடைகள் :
1. நியூசிலாந்து, 2. .என்.எஸ். கல்வாரி, 3. மத்திய பிரதேச மாநிலம் சியோனியில், 4. மார்ச் 16, 5. பாகிஸ்தான், 6.சுனில் லன்பா, 7. லெஸ்லி பாஸ்செட், 8. ஜியான்னி இன்பேன்டினோ, 9. மே-1, 2016-ல், 10. பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா, 11. மே-4, 2016, 12. மே-3, 13. குல்கர்னி, 14. கோவா சிப்யார்டு லிமிடெட், 15. நொய்டா, 16. ரசாக், 17. எச்.ஆர்.நாகேந்திர கமிட்டி, 18. தென் ஆப்பிரிக்கா, 19. பாரத் தர்சன் டூரிஸ்ட் டிரெயின், 20. சோபியா (SO-F-IA), நாசா மற்றும் ஜெர்மனி விண்வெளி மையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆய்வுத்திட்டத்தில் மீசோஸ்பியர் அடுக்கில் ஆக்சிஜன் அணுக்கள் இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது.





No comments:

Post a Comment