தமிழ்நாட்டின் "வேர்ட்ஸ்வொர்த்" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்
- வாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் உருசியம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்றர். பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். இவருடைய பாடல்கள் 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம் வெளியிட்ட 'புதுத்தமிழ்க் கவிமலர்கள்" என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.
- பிரெஞ்சு மொழியாற்றலைப் பயன்படுத்தி, "தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
- "செவாலியர்" என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். பிரெஞ்சு மொழியில் வல்லவர். இவருக்கு "கவிஞரேறு", "பாவலர் மணி" என்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
- பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான கவிஞர்களில் இவரும் ஒருவர்.
- இவருடைய பாடல்களில் இயற்கை புனைவு இயற்கையாவே வந்தமைந்திருக்கும். இக்காரணத்தாலேயே இவரை "தமிழகத்தின் வேர்ட்வொர்த்" என பாராட்டுகின்றனர்.
- வாணிதாசனின் கவிதை வளத்தை உணர்ந்து திரு.வி.க. அவர்கள் திரு. வாணிதாசன் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று கூறினார். மயிலை சிவமுத்து "தமிழ்நாட்டுக் தாகூர்" என்று புகழ்ந்துரைத்தார். தமிழ்நாடு அரசுக் கவிஞரான இவரின் நூல்கள் அனைத்தும் தற்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.
- கவிஞர் ஏறு வாணிதாசன் அவர்களின் படைப்புகள்:
- இரவு வரவில்லை
- இன்ப இலக்கியம்
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம்
- எழிலோவியம்
- குழந்தை இலக்கியம்
- கொடி முல்லை
- சிரித்த நுணா
- தமிழச்சி
- தீர்த்த யாத்திரை
- தொடுவானம்
- பாட்டரங்கப் பாடல்கள்
- பாட்டு பிறக்குமடா
- பெரிய இடத்துச் செய்தி
- பொங்கற்பரிசு
- வாசிதாசன் கவிதைகள்
No comments:
Post a Comment