SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, October 30, 2016

உடுமலை நாராயணகவி அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

உடுமலை நாராயணகவி அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

சிறு குறிப்பு:
  • பெயர்உடுமலை நாராயணகவி
  • இயற்பெயர் - நாராயணசாமி
  • சிறப்புப் பெயர் - கவிராயர்
  • பிறந்த இடம் - உடுமலைப் பேட்டை
  • பிறந்த வருடம்  - 1899
  • மறைந்த வருடம்  - 23.5.1981
விவர குறிப்புகள்:
>>விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

>>இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.

>>நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

>>ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர்.

>>நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர்.

>>பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

>>கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்' கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

>>அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்

>>புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.

>>இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

>>தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

>>இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

>>இத்தகைய பெருமைக்குரிய உடுமலை நாராயணகவி 23.5.1981 அன்று இயற்கை எய்தினார்.



No comments:

Post a Comment