ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
- சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக புனித ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியவர்.
- வில்லிபுத்தூர் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக்கியவர்.
- மக்களின் நல்வாழ்வுக்காக கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தியவர்.
- ஏழை எளிய மக்களின் வசதிக்காக முதன்முதலாக நியாய விலைக்கடைகளை அறிமுகப்படுத்தியவர்.
- தமிழ் ஆட்சி மொழியாக முதன்முதலாக முயற்சி எடுத்தவர்.
- பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்கி அதன் மூலம் பல அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட வழிவகை செய்த முன்னோடி.
- பெண்ணடிமைத்தனம் ஒழிய முதன்முதலாக சட்டமியற்றியவர்.
- கல்வி,வேலை வாய்ப்புகளில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியவர்.
- தமிழக கோயில்களில் முதன்முதலாக தேவாரம்,திருவாசக பாடல்களை ஒலிக்க வழி செய்தவர்.
- பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை அமல்படுத்த முதன்முதலில் ஒரு குழு அமைத்தவர்.
- சரஸ்வதி மகாலில் இருக்கும் ஓலைச்சுவடிகளை காப்பாற்ற வளர்ச்சி நிதி அளித்தவர்.
- விவசாயிகளின் பாதுகாப்புக்காக பயிர் காப்பீடுக் கழகம்,கால்நடைக் காப்பீட்டுக் கழகங்களை அமைத்தவர்.
- பாசன வசதியை பெருக்கிடும் பொருட்டு கீழ்பவானி,சாத்தனூர்,வீடூர் ஆகிய இடங்களில் அணைகளை கட்டுவித்தவர்.
- தமிழகத்தில் இருந்த கோயில்களின் நகைகளைக் கணக்கெடுத்து முதன் முதலில் ஆவணங்களில் பதியச் செய்தவர்.
- இத்தனைப் பெருமைகளுக்கும் உரித்தானவர் யார் என்றால் அவர்தான் சுதந்திர இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓபிஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்.
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
puthiyaseithi | புதிய செய்தி
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment