நோபல் பரிசு 2016 - இலக்கியம் - வெகு மக்கள் கவிஞருக்கு விருது!
இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு மக்கள் பாடகரும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு வழங்கப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. அவர் நாவலாசிரியரோ சிறுகதையாசிரியரோ நாடகாசிரியரோ இலக்கியக் கவிஞரோ கிடையாது. பாப் பாடல்கள் எனப்படும் வெகு மக்கள் இசை வடிவத்துக்குப் பாடல்கள் எழுதி பிரபலமானவர். "அமெரிக்கப் பாடல் மரபுக்குள் புதுவிதமான கவிதை வெளிப்பாடுகளை உருவாக்கியதற்காக" என்று கூறி நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1993-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை டோனி மாரிஸன் பெற்று 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கருக்கு இப்போதுதான் இந்தப் பரிசு கிடைக்கிறது. மின்னசோட்டா மாகாணத்தின் டுலுத் நகரில் 1941-ல் பிறந்தவர் பாப் டிலன். பதின்பருவத்தில் பல்வேறு இசைக் குழுக்களில் பங்கேற்றார். அமெரிக்க நாட்டுப்புற இசையின் மீதும் புளூஸ் இசையின் மீதும் அவருக்கு அதிக நாட்டம். நவீன கவிஞர்கள், பீட் தலைமுறையின் கவிஞர்கள் போன்றோர் டிலன் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். 1961-ல் நியூயார்க்குக்கு இடம்பெயர்ந்தவர் கிரீன்விச் கிராமத்தில் உள்ள கிளப்களில் நிகழ்ச்சிகள் நடத்தினார். இசைப்பேழைத் தயாரிப்பாளர் ஜான் ஹாமண்டுடனான சந்திப்பால் 'பாப் டிலன்' என்ற பெயரில் தனது முதல் ஆல்பத்தை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட 'பிரிங்கிங் இட் ஆல் பேக் ஹோம்', 'ஹைவே 61 ரீவிஸிட்டட்', 'ப்ளட் ஆன் த ட்ராக்ஸ்', 'ஓ மெர்ஸி', 'டைம் அவுட் ஆஃப் மைண்ட்' ஆல்பங்கள் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டதுடன் அவற்றின் இசையும் பாடல்களும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தன. மக்களின் வாழ்க்கையிலிருந்து எளிய சொற்கள், தனது சமகாலப் பிரச்சினை குறித்த அவரது கோபம் போன்ற பண்புகள் அவரைத் தனித்துவம் கொண்ட பாடலாசிரியராக நிலைநிறுத்துகின்றன.
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment