நோபல் பரிசு 2016 - அமைதி - அமைதியை நோக்கிய பயணம்
2016-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சண்டோஸ் (வயது 65) உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது விசுவாசம்மிக்க பணியாளர்கள் அவரை எழுப்பித் தகவல் சொல்வதற்கு மறுத்துவிட்டனர். உலகின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த எஃப்.ஏ.ஆர்.சி. கொரில்லா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக இந்த பரிசு அதிபர் யுவான் மேனுவல் சண்டோஸூக்கு வழங்கப்பட்டது. ஆனால் பொதுவாக்கெடுப்பில் அந்த அமைதி ஒப்பந்தம் கொலம்பிய மக்களால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து சில நாட்களில் இந்த அமைதி விருது வழங்கப்பட்டது முரண்நகை. கொலம்பியாவில் அமைதியை இதுவரை கொண்டுவர முடியாவிட்டா லும், அதிபர் சண்டோஸ், அமைதிக்காக நடத்தும் போராட்டத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை நோபல் குழு முன்வைத்துள்ளது.ஸ்பானிஷ் காலனியாதிக்க காலத்தி லிருந்து சில நிலவுடைமையாளர்களிடம் சிக்கியிருந்த விவசாயத் தொழில் ஏகபோகத்தை விடுவித்து எளிய குடியானவர்களுக்கு வழங்குவதற்காக 1964-ல் எஃப்.ஏ.ஆர்.சி. கொரில்லா யுத்தக்குழு தொடங்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை, போப் பிரான்சிஸ், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஆதரித்திருந்தனர். அதிபர் சண்டோஸ், தற்போது மீண்டும் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்காக தனது அதிகாரிகளை ஹவானாவுக்கு அனுப்பியுள்ளார். அவர் தான் நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தையில் வெற்றிபெற்றால், யாசர் அராஃபத், நெல்சன் மண்டேலா, மிகையில் கோர்பச்சேவ், மார்டின் லூதர் கிங் வரிசையில் வரலாற்று நாயகராக ஆவார்.
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment