நோபல் பரிசு 2016 - பொருளாதாரம் - ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம்
இங்கிலாந்தில் பிறந்த ஆலிவர் ஹார்ட்டுக்கும் (68) பின்லாந்தைச் சேர்ந்த பெங்ட் ஹோம்ஸ்ட்ரோமுக்கும் (67) ஒப்பந்தக் கோட்பாட்டுக்குப் பங்களித்த வகையில் பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன வாழ்க்கையில் வாடகை ஒப்பந்தம், வேலை ஒப்பந்தம், காப்பீட்டு ஒப்பந்தம் என்று தீராத ஒப்பந்தங்களைச் சுற்றி வாழ்கிறோம். இவை பல நுணுக்கங்களைக் கொண்டவை. அந்தந்த நாடு மற்றும் சமூகத்தில் நிலவும் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. சில ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் இடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தனிநபரைவிட அதிகத் தகவல்கள் தெரிந்திருக்க சாத்தியமுண்டு. ஆரோக்கியக் காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கு உதாரணம். ஆரோக்கியமான நபர்களை உள்ளடக்குவதை விட, ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமுள்ள நபர்களை உள்ளடக்குவதாக ஆகிவிடுகிறது. நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒப்பந்தத்தில் உள்ள மேலாளர்கள், நிறுவனத்தின் பங்குதாரர்களின் வருவாய்க்கு உதவுவதை விட தங்கள் வருவாயை அதிகப்படுத்துவதில் நாட்டம் செலுத்துவது தற்கால யதார்த்தமாகி வருகிறது. முதலீட்டு வங்கியாளர்கள், தங்கள் ஆண்டு ஊக்கத்தொகையைச் சம்பாதிப்பதற்காக அதிகபட்சமான துணிகரத்தில்(ரிஸ்க்) ஈடுபட்டதே 2008-ல் அமெரிக்கா சந்தித்த பெரும் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணம். இதுபோன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு ஒப்பந்தக் கோட்பாடு உதவுகிறது. ஒப்பந்தத்தில் ஈடுபடும் சகல தரப்பினரின் நலன்களையும் உள்ளடக்கிய ஒப்பந்தத்தை வடிவமைப்பதை இது சாத்தியப்படுத்துகிறது. நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களுக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான குறுகிய கால நலன்களை முன்னிட்டு நிறுவனத்தின் நீண்டகால ஆரோக்கியத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தாத வகையில் உருவாக்க வேண்டிய ஒப்பந்தங்களுக்கான கோட்பாட்டை ஹோல்ம்ஸ்ட்ரோம் தனது ஆய்வுக்கட்டுரைகள் வழியாக வெளியிட்டார். பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தல், இணைத்துக்கொள்ளுதல், பெரு நிறுவன உரிமைத்துவம் தொடர்பான கட்டுரைகளை ஹார்ட் எழுதியுள்ளார். பொதுக் கொள்கைகளும் தனியார் சந்தையில் ஒப்பந்தங்களும் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கான புதிய சிந்தனைகளை சாத்தியப் படுத்தியதுதான் இவர்களின் பங்களிப்பு என்று நோபல் நினைவுப் பரிசுக் குறிப்பு கூறுகிறது.
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment