ஒரு வேதிவினையில் பங்கெடுக்கும் வேதிப்பொருளின் மிகச் சிறிய அடிப்படை அலகை மூலக்கூறு என்கிறோம். அதாவது பிணைந்த அணுக்களின் குழு. இந்த மூலக்கூறே ஒரு தனி இயந்திரம் போலச் செயல்பட ஆரம்பித்தால், அதாவது ஓர் அடிப்படை அலகே, ஓர் இயந்திரம் போல இயங்கினால்? அதைக் கண்டுபிடித்ததற்காகத்தான் வேதியியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கண்டறிந்ததுதான் உலகிலேயே மிகச் சிறிய இயந்திரம். அதாவது, இந்தக் கால மொழியில் சொல்ல வேண்டுமானால், நானோ இயந்திரம்.
வேதியியலுக்கான நோபல் 2016 பரிசை ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்த்ராஸ்போ பல்கலைக்கழகத்தின் ஜான் பியர் சொவாஜ், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண வடமேற்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ஜே. ஃப்ரேஸர் ஸ்டாடர்ட், நெதர்லாந்து க்ரோனின்ஜென் பல்கலைக்கழகத்தின் பெர்னார் எல். ஃபெரிங்கா ஆகியோர் பெறுகிறார்கள். மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்ததற்காகவும், அவற்றில் கூட்டுவினைகளை சாத்தியப்படுத்தியதற்காகவும் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மூலக்கூறுகளின் நகர்வுகளை இனிமேல் கட்டுப்படுத்த முடியும். தேவையான சக்தியைக் கொடுத்து, நாம் நினைக்கும் செயல்பாட்டை இவற்றைக் கொண்டு செய்ய முடியும். சுருக்கமாக இந்த மூலக்கூறு இயந்திரங்கள், நுண் மின்தூக்கியைப் போலவும், செயற்கைத் தசைகளாகவும், நுண் மோட்டார்களாகவும் செயல்படும். 1830-களில் மின் மோட்டார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையுடன் ஒப்பிட்டால், இந்தக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை உணர முடியும். அப்போது மின் மோட்டார்களுடன் பல்வேறு சுழலும் நெம்புகோல்களையும் சக்கரங்களையும் விஞ்ஞானிகள் காட்சிப்படுத்தியபோது, எதிர்காலத்தில் மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், உணவு இயந்திரங்களுக்கு அவை அடிப்படை அம்சமாக இருக்கப்போகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அதேபோலவே, இன்றைக்கு மூலக்கூறுகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற இந்தக் கண்டறிதல் மிகப் பெரிய வேதியியல் புரட்சி என்றே சொல்ல வேண்டும். புதிய பொருட்கள், உணர்கருவிகள் (sensors), ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (energy storage systems) உருவாக்குவதில் மூலக்கூறு இயந்திரங்கள் மிகப் பெரிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிற்றுருவத்தில் பெரும் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கும் இந்தக் கண்டறிதல், வேதியியலுக்குப் புதிய பரிமாணத்தை அளித்து, பல்வேறு புதிய மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment