SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, October 22, 2016

நடப்பு நிகழ்வுகள் - அக்டோபர் 2-8

நடப்பு நிகழ்வுகள் - அக்டோபர் 2-8

* குஜராத் கடற் பகுதியில் 9 பேருடன் வந்த பாகிஸ்தான் மர்மப் படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். (அக்டோபர் 2)
* தவறுதலாக எல்லை தாண்டிச் சென்றபோது பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர் சந்து பாபுலால் சவானை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார். (அக்டோபர் 2)
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை என்று கூறி, கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தது. (அக்டோபர் 3)
* கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். (அக்டோபர் 3)
* செல்போன் கோபுரங்களின் தாக்கம் குறித்து தொலைத் தொடர்புத் துறை அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (அக்டோபர் 3)
* செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியைக் கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 3)
* காஷ்மீரில் ராணுவ முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடந்த நிலையில், எல்லை நிலவரம் குறித்து முப்படைத் தளபதிகளுடன் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தினார். (அக்டோபர் 3)
* காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் மனுவை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசுச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவ் கடிதம் எழுதினார். (அக்டோபர் 4)
* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்தது. தமிழகத்துக்கு கர்நாடகம் 12 நாட்கள் தண்ணீர் தரவும் உத்தர விட்டது. (அக்டோபர் 4)
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர். (அக்டோபர் 4)
* தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. (அக்டோபர் 4)
* பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங்கும் டெல்லியில் கையெழுத்திட்டனர். (அக்டோபர் 4)
* இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 4)
* தமிழக வாகனங்கள் 23 நாட்களுக்குப் பிறகு பெங்களூருவுக்கு இயக்கப்பட்டன. அதேபோல கர்நாடக மாநில அரசு பஸ்களும் ஓசூர் வந்தன. (அக்டோபர் 5)
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். (அக்டோபர் 5)
* காஷ்மீர் எல்லையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. (அக்டோபர் 5)
* பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அரசிடம் ராணுவம் ஒப்படைத்தது. (அக்டோபர் 5)
* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-பியரே சாவேஜ், இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்கரான ஜே. பிரேசர் ஸ்டொட்டார்ட், நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்னார்டு பெரிங்கா ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 5)
* காஷ்மீரில் மீண்டும் ராணுவ முகாமைத் தாக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். (அக்டோபர் 6)
* உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். (அக்டோபர் 6)
* பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்தியாவின் 'ஜிசாட்-18' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. (அக்டோபர் 6)
* அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவும் கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தமிழக ஆட்சி நிர்வாகம் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். (அக்டோபர் 7)
* 52 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உழைத்த கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 7)
* நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், தமிழகத்தில் மட்டும் ரூ. 91 கோடி மதிப்புள்ள ஒரு லட்சத்து 549 வழக்குகள் முடிவுக்கு வந்ததாக தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி டீக்காராமன் கூறினார். (அக்டோபர் 8)
* எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க விமானப் படை தயாராக உள்ளது என உத்தரப்பிரதேச மாநிலம் கின்டன் விமானப் படை தளத்தில் விமானப் படை தளபதி அருப் ராகா கூறினார். (அக்டோபர் 8)
* ஹைதி நாட்டில் மேத்யூ புயல் தாக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்தது. இப்புயலால் அமெரிக்காவிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. (அக்டோபர் 8)


No comments:

Post a Comment