SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'நனிழ புகழ்"- இலக்கணக் குறிப்பு தருக
அ)தொழிற்பெயர்
ஆ) உருவகம்
இ)உரிச்சொல் தொடர்
ஈ)அடுக்குத்தொடர்
விடை : இ)உரிச்சொல் தொடர்

82.'தஞ்சை" - இலக்கணக்குறிப்பு தருக
அ);இடைப்போலி
ஆ)மரூஉ
இ)மெலித்தல் விகாரம்

ஈ)உருவகம்
விடை : ஆ)மரூஉ

83.'இரவும் பகலும் - இலக்கணக்குறிப்பு தருக
அ)எண்ணும்மை
ஆ)உவமைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : அ)எண்ணும்மை

84.'கல்வி இல்லாத பெண் களர் நிலம் பொன்றவள்"- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
அ)கல்வி இல்லாத பெண் எதைப் போன்றவள்;?
ஆ)கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவளா?
இ)எது இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்?
ஈ)கல்வி இல்லாத பெண் எதற்று ஒப்பாகும்?
விடை : அ)கல்வி இல்லாத பெண் எதைப் போன்றவள்;?

85.'அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்" - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
அ)மாற்றாரை மதிப்பது எத்தகைய பண்பு?
ஆ)அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
இ)அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினரா?
ஈ)அறிஞர் அண்ணா எவ்வாறு மதிப்பார்?
விடை : ஆ)அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?

86.'மாசற்ற் மனங்கொண்டவர்இல்லறம் நல்லறமாகும்" - விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க
அ)மாசற்ற மனங்கொண்டவர் எங்கு நல்லறமாவர்?
ஆ)எதற்காக இல்லறம் நல்லறமாகும்?
இ)எவர் இல்லறம் நல்லறமாகும்?
ஈ)மாசற்ற மனங்கொண்டவர் இல்லறம் நல்லறமாகுமா?
விடை : ஆ)எதற்காக இல்லறம் நல்லறமாகும்?

87.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
மரை      மறை
அ).திருக - குறைத்தல்
ஆ)ஒளித்தல் - விழுதல்
இ)வரையாடு - மறையவன்
ஈ)தாமரை - வேதம்
விடை : இ)வரையாடு - மறையவன்

88.ஒலி வெறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தரித்தல்     தறித்தல்
அ)அணிதல்  - வெட்டுதல்
ஆ)ஏழ்மை அடைதல் - தறிஒட்டுதல்
இ)வேடம் - கட்டுத்தறி
ஈ)சூழ்ச்சி - வெறுபடல்
விடை : அ)அணிதல்  - வெட்டுதல்

89.ஒலி வெறுபாடறிந்து சரியான பொருளை அறிக
கழகம்                   கலகம்
அ)கட்சி அலுவலகம்  - கலக்கமடைதல்
ஆ)உறுதி         - அதிர்ச்சி
இ)அறிஞர்        - ஒழிதல்
ஈ)கூட்டமைப்பு     - சண்டை உருவாதல்
விடை : ஈ)கூட்டமைப்பு     - சண்டை உருவாதல்

90.'கா" - உரிய பொருள் தரும் சொல்லைத் தேர்வு செய்க
அ)காப்பு
ஆ)காவல்
இ)சோலை
ஈ)காது
விடை : இ)சோலை




No comments:

Post a Comment