TNPSC பொதுத்தமிழ்
71.'கொடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை" - எதுகையை தேர்க
அ)கொடு;பதூஉங் - மழை
ஆ)கெடுப்பதூஉங் - எடுப்பதூஉ
இ)கொடுப்பதூங் - சார்வாய்மற்
ஈ)கெடுப்பதூஉங் - மெல்லா
விடை : ஆ)கெடுப்பதூஉங் - எடுப்பதூஉ
72.'தேவரும் பிழைத்திழலர் தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் ?" - எதுகையை தேர்க
அ)தேவரும் - பிழைத்திலர்
ஆ)தெய்வ - வேதியர்
இ)அறமும் - ஈறின்றால்
ஈ)தேவரும் - ஏவரும்
விடை : ஈ)தேவரும் - ஏவரும்
73.'கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே" - இயைபுத் தொடையை தேர்க
அ)கயிலையெனும் - கனகமகா
ஆ)வடமைல - தெற்குமலை
இ)அம்மே - அம்மே
ஈ)நிற்குமலை - மேருவென
விடை : இ)அம்மே - அம்மே
74.'ஆயுதங்கள் பரிகரிப்பார் அமைதி காப்பார் வாயடியும் கையடியும் வளரச் செய்வார்" - இயைபுத் தொடையை தேர்க
அ)பரிகரிப்பார் - செய்வார்
ஆ)வாயடியும் - கையடியும்
இ)அயுதங்கள் -அமைதி
ஈ)காப்பார் - செய்வார்
விடை : ஈ)காப்பார் - செய்வார்
75.'வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்' - இயைபுத் தொடையைத் தேர்க
அ)வல்லவன் - வண்மைக்
ஆ)கவிஞர் - கனவினைப்
இ)போலும் - போலும்
ஈ)ஆக்கிய - கவிஞர்
விடை : இ)போலும் - போலும்
76.'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ" என்ப் போற்றப்படுவர்
அ)திழருமூலர்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)சேக்கிழார்
ஈ)திழருநாவுக்கரசர்
விடை : இ)சேக்கிழார்
77.'புரட்சிக் கவிஞர்" எனக் குறிக்கப் பெறுபவர்
அ)கம்பதாசன்
ஆ)கண்ணதாசன்
இ)வாணிதாசன்
ஈ)பாரதிதாசன்
விடை : ஈ)பாரதிதாசன்
78.மதுரைக் கூல வாணிகன் என்று அழைக்கப் படுபவர்
அ)சீத்தலைச் சாத்தனார்
ஆ)மதுஐரக் கண்க்காயர்
இ)இளங்கோவடிகள்
ஈ)கபிலர்
விடை : அ)சீத்தலைச் சாத்தனார்
79.தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)திருத்தக்கத் தேவர்
இ)நாதகுத்தனார்
ஈ)சீத்தலைச் சாத்தனார்
விடை : ஈ)சீத்தலைச் சாத்தனார்
80.மணநூல் என அழைக்கப்படுவது
அ)கம்பராமாயணம்
ஆ)வளையாபதி
இ)சிலப்பதிகாரம்
ஈ)சீவகசிந்தாமணி
விடை : ஈ)சீவகசிந்தாமணி
No comments:
Post a Comment