TNPSC பொதுத்தமிழ்
61.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)துகிர் - பவளம்
ஆ)தொடை - அணி
இ)கலம் - தொலைவு
ஈ)மேதி - வீடு
விடை : அ)துகிர் - பவளம்
62.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)தடம் - குளிர்ச்சி
ஆ)ஈறு - எல்லை
இ)மிசை - கை
ஈ)கமலம் - இசை
விடை : ஆ)ஈறு - எல்லை
63.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)ஒல்லை - விரைவு
ஆ)அம் - பாம்பு
இ)அங்கை - துன்பம்
ஈ)உதிரம் -உடல்
விடை : அ)ஒல்லை - விரைவு
64.இவற்றில் தவறான வரிசை எது?
அ)சேய் - குழந்தை
ஆ)பூதி - திருநீறு
இ)சவம் - பிணம்
ஈ)வரம்பு - அழகு
விடை : ஈ)வரம்பு - அழகு
65.இவற்றில் சரியான வரிசை எது?
அ)ஏன் - அழகு
ஆ)சீத்தையர் - மேலானவர்
இ)நாளி - நட்பு
ஈ)தமர் - பெற்றோர்
விடை : அ)ஏன் - அழகு
66.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)மதலை - துணை
ஆ)எள்ளுவர் - போற்றுவர்
இ)ஈனும் - பகை
ஈ)பல்லார் - அரசர்
விடை : அ)மதலை - துணை
67.இவற்றில் தவறான வரிசை எது?
அ)இடர் - துன்பம்
ஆ)ஏமாப்பு - பாதுகாப்பு
இ)நடலை - நோய்
ஈ)ஞமன் - எமன்
விடை : இ)நடலை - நோய்
68.பொருத்தமான பொருளை தேர்வு செய்க?
அ)கான் - யானை
ஆ)தடக்கரி - பெரிய யானை
இ)திரள் - சிறய யானை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)தடக்கரி - பெரிய யானை
69.இவற்றில் தவறான வரிசை எது?
அ)தாரை - வழி
ஆ)உழுவை - புலி
இ)அடவி - மழை
ஈ)புலால் - இறைச்சி
விடை : இ)அடவி - மழை
70.இவற்றில் சரியான வரிசை எது?
அ)கனல் - நெருப்பு
ஆ)மதகரி - தந்தம்
இ)கிரி - மலை
ஈ)மடங்கல் - சிங்கம்
விடை : ஆ)மதகரி - தந்தம்
No comments:
Post a Comment