SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றி அறிக: 'வணங்கு"
அ)வணங்கி
ஆ)வணங்குதல்
இ)வணக்கம்
ஈ)வணங்கியவளை
விடை : ஈ)வணங்கியவளை

52.'எடு" என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் தருக
அ)எடுத்தது
ஆ)எடுத்தாளை
இ)எடுத்த
ஈ)எடுத்து
விடை : ஈ)எடுத்து

53.'குனி"என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் தருக
அ)குனியும்
ஆ)குனிந்து
இ)குனிந்த
ஈ)குனிந்தது
விடை : ஆ)குனிந்து

54.'கொல்" என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் தருக
அ)கொன்று
ஆ)கொல்லும்
இ)கொல்வான்
ஈ)கொன்றது
விடை : அ)கொன்று

55.வேர்ச்சொல்லை பெண்பால எதிர்கால வினைமற்றாக்குக 'வா"
அ)வருதல்
ஆ)வந்தாள்
இ)வருவாள்
ஈ)வருகிறாள்
விடை : இ)வருவாள்

56.வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் காண்க:'மகிழ்"
அ)மகிழ்வாய்
ஆ)மகிழ்ந்தாய்
இ)மகிழ்ந்தான்
ஈ)மகிழ்ந்து
விடை : ஈ)மகிழ்ந்து

57.நீக்கு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயர் வடிவம்
அ)நீக்கிய
ஆ)நீக்கும்
இ)நீக்குதல்
ஈ)நீக்க
விடை : இ)நீக்குதல்

58.'குனி" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம்
அ)குனியும்
ஆ)குனிந்து
இ)குனிந்த
ஈ)குனிந்தது
விடை : ஆ)குனிந்து

59.'விடு"என்ற சொல்லின் வினையெச்சம் தருக
அ)விட்டான்
ஆ)விட்டு
இ)விட்டது
ஈ)விடான்
விடை : ஆ)விட்டு

60.'மற" - என்பதன் தொழிற்பெயர்
அ)மறந்து
ஆ)மறைந்து
இ)மறத்தல்
ஈ)மறந்தால்
விடை : இ)மறத்தல்




No comments:

Post a Comment