TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்து எழுதுக: இணரெரி
அ)இணம் + எரி
ஆ)இணர் + எரி
இ)இண + எரி
ஈ)இணை + எரி
விடை : ஆ)இணர் + எரி
92.பிரித்து எழுதுக : புத்தேளுலகு
அ)புத்தே + யுலகு
ஆ)புத்தே + உலகு
இ)புத்தேன் + உலகு
ஈ)புதிய + உலகு
விடை : இ)புத்தேன் + உலகு
93.பிரித்து எழுதுக : தீந்தமிழ்
அ)தீம் + தமிழ்
ஆ)தீ + தமிழ்
இ)தீத் + தமிழ்
ஈ)தீந் + தமிழ்
விடை : அ)தீம் + தமிழ்
94.பிரித்து எழுதுக : வெங்கதிர்
அ)வெங்கு + கதிர்
ஆ)வெம்மை + கதிர்
இ)வெங் + கதிர்
ஈ)வெண்மை + கதிர்
விடை : ஆ)வெம்மை + கதிர்
95.பிரித்து எழுதுக : அதுவலர்
அ)அது + வலர்
ஆ)அவ் + அவர்
இ)அதுவ் + அவர்
ஈ)அது + அவர்
விடை : ஈ)அது + அவர்
96.எதிர்ச்சொல் தருக : உயர்வு
அ)அயர்வு
ஆ)பெயர்வு
இ)தாழ்வு
ஈ)வாழ்வு
விடை : இ)தாழ்வு
97.எதிர்ச்சொல் தருக : சிறுமை
அ)வறுமை
ஆ)பொறுமை
இ)கருமை
ஈ)பெருமை
விடை : ஈ)பெருமை
98.எதிர்ச்சொல் தருக : மெய்
அ)உடல்
ஆ)கீர்த்தி
இ)பொய்
ஈ)செய்
விடை : இ)பொய்
99.எதிர்ச்சொல் தருக : உயர்ந்தது
அ)வளர்ந்து
ஆ)தேய்ந்து
இ)இறந்து
ஈ)தாழ்ந்து
விடை : ஈ)தாழ்ந்து
100.எதிர்ச்சொல் தருக : வந்தனன்
அ)சேரல்
ஆ)செல்லல்
இ)சென்றனன்
ஈ)சென்றிலன்
விடை : இ)சென்றனன்
Thanks for post:
ReplyDeleteship gửi hàng tới Nepal
ship gửi hàng tới Nepal
ship bưu phẩm đi Bahrain
ship cấp tốc sang Qatar
ship cấp tốc sang iran
ship nhanh tới Jordan
ngu linh chi