TNPSC பொதுத்தமிழ்
91.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)ஜலம் குடித்து சந்தோஷம் அடைந்தான்
ஆ)ஜலம் குடித்து மகிழ்ச்சி அடைந்தான்
இ)நீர் குடித்து மகிழ்ச்சி அடைந்தான்
ஈ)நீர் குடித்து சந்தோசம் அடைந்தான்
விடை : இ)நீர் குடித்து மகிழ்ச்சி அடைந்தான்
92.பிறமொழிச் சொற்கள் கலவாதத் தொடரைத் தேர்க
அ)கோயிலுக்குக் கும்பாயிஷேகம் நடைபெற்றது
ஆ)கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது
இ)கோயிலுக்குக் கும்பாபிசேகம் நடைபெற்றது
ஈ)கோயிலுக்குக் கும்பாபிஸேகம் நடைபெற்றது
விடை : ஆ)கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது
93.பிறமொழிச் சொற்கள் கலவாத வாக்கியத்தை குறியிடுக
அ)கொடுக்கப்பட்ட பெட்டிஷன் மனு வாபஸ் ஆனது
ஆ)கொடுக்கப்பட்ட புகார் மனு வாபஸ் பெறப்பட்டது
இ)கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது
ஈ)பிற்மொழி கலப்பு இல்லை
விடை : இ)கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது
94.பிறமொழி சொற்களை திருத்தி எழுதுக
அ)நான் செய்த தவறுக்கு சகல ஜனங்களும் என்னை ஷமித்தருள் வேண்டும்
ஆ)நான் செய்த தவறுக்கு எல்லா ஜனங்களும் என்னை மன்னித்தருள வேண்டும்
இ)நான் செய்த தவறுக்கு சகலரும் என்னை மன்னித்தருள வேண்டும்
ஈ)நான் செய்த தவறுக்கு எல்லாரும் என்னை மன்னித்தருள வேண்டும்
விடை : ஈ)நான் செய்த தவறுக்கு எல்லாரும் என்னை மன்னித்தருள வேண்டும்
95.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க
அ)பஜாரில் சில வஸ்துகளை வாங்கச் சென்றோம்
ஆ)கடைத்தெருவில் சில வஸ்துகளை வாங்கச் சென்றோம்
இ)பஜாரில் சில பொருட்களை வாங்கச் சொன்றோம்
ஈ)கடைத்தெருவில் சில பொருட்களை வாங்கச் சென்றோம்
விடை : ஈ)கடைத்தெருவில் சில பொருட்களை வாங்கச் சென்றோம்
96.பிறமொழிச் சொற்களை நீக்குதல்
அ)பஜாரில் பழம் வாங்கினேன்
ஆ)பசாரில் பழம் வாங்கினேன்
இ)கடைத்தெருவில் பழம் வாங்கினென்
ஈ)பஷாரில் பழம் வாங்கினேன்
விடை : இ)கடைத்தெருவில் பழம் வாங்கினென்
97.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)கஷ்டமா நஷ்டமா கன்னித்தமிழ் கற்க
ஆ)துன்பமா நட்டமா கன்னித்தமிழ் கற்க
இ)துன்பமா இழப்பா கன்னித்தமிழ் கற்க
ஈ)கட்டமா நட்டமா கன்னித்தமிழ் கற்க
விடை : இ)துன்பமா இழப்பா கன்னித்தமிழ் கற்க
98.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம்
அ)சகலரும் விவாகத்திற்கு வரவேண்டும்
ஆ)எல்லோரும் திருமணத்திற்கு வரவேண்டும்
இ)சகலரும் திருமணத்திற்கு வரவேண்டும்
ஈ)எல்லோரும் விவாகத்திற்கு வரணும்
விடை : ஆ)எல்லோரும் திருமணத்திற்கு வரவேண்டும்
99.கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் கோடிட்ட இடங்களில் பிற மொழிச் சொற்கள் கலவாத சொல்லைப் புகுத்துக
அவன் ............ பெற்றான்
அ)இலஞ்சத்தை ரூபாயாகப்
ஆ)இலஞ்சத்தை காசாகப்
இ)கையூட்டைச் செக்காகப்
ஈ)கையூட்டைப் பணமாகப்
விடை : ஈ)கையூட்டைப் பணமாகப்
100.பிறமொழி சொற்களற்ற வாக்கியம் தேர்க
அ)பகவான் கிருபையால் உயிர் வாழ்கிறேன்
ஆ)நாளை இந்த சட்டம் அமுலுக்கு வருகிறது
இ)புனித நன்னாளில் புதுமனைப் புகுவிழா நடந்தது
ஈ)அவாளோட ஆத்து விசேஷத்துக்கு சென்றேன்
விடை : இ)புனித நன்னாளில் புதுமனைப் புகுவிழா நடந்தது
Thanks for post:
ReplyDeleteship tốc độ đi Qatar
ship tốc độ đi Bahrain
chuyển cấp tốc hàng tới Jamaica
chuyển phát cấp tôc tới Bahrain
chuyển phát cấp tôc đi Bahrain
chuyển phát nhanh sang Bahrain
ngũ linh chi