TNPSC பொதுத்தமிழ்
31.'கரென்ட்" -தமிழ்சொல் தருக
அ)பேட்டரி
ஆ)மின்சாரம்
இ)மின்விசை
ஈ)மின்பொறி
விடை : ஆ)மின்சாரம்
32.'உண்" - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
அ)உண்ட
ஆ)உண்ணும்
இ)உண்டான்
ஈ)உண்டவன்
விடை : இ)உண்டான்
33.'காண்" - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
அ)காண்கிறான்
ஆ)கண்டு களித்தான்
இ)கண்டான்
ஈ)கண்டவன்
விடை : ஆ)கண்டு களித்தான்
34.'கேள்" - வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக
அ)கேட்ட பாடல்
ஆ)கேள்வி
இ)கேள் சொல்கிறென்
ஈ)கேட்டவன்
விடை : அ)கேட்ட பாடல்
35.'ஆடு" -தொழிற்பெயரைக் கூறுக
அ)ஆடியவன்
ஆ)ஆடு
இ)ஆடுதல்
ஈ)ஆட்டிய
விடை : இ)ஆடுதல்
36.சொல்லி முடித்தான் - இதில் 'சொல்லி" என்பதற்கு வேர்ச்சொல் தருக
அ)சொல்லிய
ஆ)சொல்லியவன்
இ)சொல்
ஈ)சொன்ன
விடை : இ)சொல்
37.பார்த்த கண்கள் - இதிழல் 'பார்த்த" என்பதற்கு வேர்ச்சொல் தருக
அ)பார்த்த
ஆ)பார்த்து
இ)பார்
ஈ)பார்வை
விடை : இ)பார்
38.'வந்தவன்" - இச்சொல்லின் வேர்ச்சொல் தருக
அ)வரு
ஆ)வந்த
இ)வருக
ஈ)வா
விடை : ஈ)வா
39.'உடுத்த" - என்னும் பெயரெச்சத்தை வினையெச்சமாக்குக
அ)உடு
ஆ)உடுத்தி
இ)உடுப்பு
ஈ)உரு
விடை : ஆ)உடுத்தி
40.'வெல்" இச்சொல்லை வினையாலணையும் பெயராக்கு
அ)வென்றவன்
ஆ)வென்ற
இ)வெல்லு
ஈ)வெல்லுதல்
விடை : அ)வென்றவன்
No comments:
Post a Comment