SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.செயப்பாட்டு வினை கண்டறிக
அ)பாண்டியனை பல்லவர் வென்றனர்
ஆ)ரைட் சகோரரர்கள் ஆகாயவிமானம் கண்டுபிடித்தனர்
இ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
ஈ)அவன் யாவராலும் புகழப்படுகிறான்
விடை : ஈ)அவன் யாவராலும் புகழப்படுகிறான்

82.பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)மாணவன் பாடம் பயின்றான்
ஆ)கமலா நடனம் ஆடினாள்
இ)முருகன் ஒடினான்
ஈ)ஆசிரியர் பாடம் கற்பித்தார்
விடை : ஈ)ஆசிரியர் பாடம் கற்பித்தார்

83.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)தந்தை மகனுக்குக் கல்வி கற்பித்தார்
ஆ)தாய் உணவு உண்டாள்
இ)தாய் சிற்றுண்டி தருவித்தாள்
ஈ)அரசன் பாடம் கற்பித்தார்
விடை : ஆ)தாய் உணவு உண்டாள்

84.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக
இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்

85.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக
'மணவாளன் தேர்தலில் போட்டியிடார்.வெற்றி பெற்றார் மக்கள் நலனுக்காக உழைத்தார்
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : இ)தொடர் வாக்கியம்

86.வாக்கிய வகையினைக் குறிப்பிடுக
மிக உயர்ந்த இக்கோபுரத்தைக் காண்பாயாக"
அ)வினை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வியங்கோள் வினைமுற்று வாக்கியம்
விடை : ஈ)வியங்கோள் வினைமுற்று வாக்கியம்

87.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிழக 'ஐயகோ! எத்துணை பெரிய விபத்து.எத்துணை உயிரிழப்பு.
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

88.தமிழ்ச் சொல்லைத் தேர்க
அ)யுனிவர்சிட்டி
ஆ)ஸ்கூல்
இ)காலேஜ்
ஈ)பல்கலைக்கழகம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

89.ஆபீஸ் - இணையான தமிழ்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)வேலை செய்யுமிடம்
ஆ)விளையாடுமிடம்
இ)அலுவலகம்
ஈ)படிக்குமிடம்
விடை : இ)அலுவலகம்

90.பஸ் ஸ்டாண்டு என்பதன் சரியான தமிழ் சொல்
அ)பேருந்து நிறுத்தம்
ஆ)புகைவண்டி நிலையம்
இ)அஞ்சல் நிலையம்
ஈ)பேருந்து நிலையம்
விடை : ஈ)பேருந்து நிலையம்



No comments:

Post a Comment