TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
கரத்தல் கறத்தல்
அ)உண்ணல் குடித்தல்
ஆ)வெளிப்படுத்தல் மறைத்தல்
இ)வெல்லல் படித்தல்
ஈ)மறைத்தல் வெளிப்படுத்தல்
விடை : ஈ)மறைத்தல் வெளிப்படுத்தல்
52.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
உலவு உளவு உழவு
அ)உலாவுதல் வேவு பயிர்த்தொழிழல்
ஆ)உண் உள்ளம் பயிர்
இ)உலகு உள்ளே ஏர்
ஈ)உல்லாசம் உண்டு உழக்கு
விடை : அ)உலாவுதல் வேவு பயிர்த்தொழிழல்
53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
விலா விளா விழா
அ)மரம் எலும்பு உற்சவம்
ஆ)எலும்பு மரம் திருவிழா
இ)விலாசம் விளக்கு விழாக் கோலம்
ஈ)வலிமை காய் குளிர்ச்சி
விடை : ஆ)எலும்பு மரம் திருவிழா
54.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அலகு அளகு அழகு
அ)துன்பம் பண்பு அடக்கம்
ஆ)அறிவு அன்பு நேர்மை
இ)பறவையின் மூக்கு பெண் பறவை வனப்பு
ஈ)நன்மை தீமை உயர்வு
விடை : இ)பறவையின் மூக்கு பெண் பறவை வனப்பு
55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
அலை அளை அழை
அ)கடல் அலை புற்று அழைத்தல்
ஆ)அழைத்தல் கடல் அலை புற்று
இ)புற்று அழைத்தல் அழைத்தல்
ஈ)மோது அள அழைத்தல்
விடை : அ)கடல் அலை புற்று அழைத்தல்
56.உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க 'மூ"
அ)ஊமை
ஆ)மூப்பு
இ)மிகுதி
ஈ)குறைவு
விடை : ஆ)மூப்பு
57.'நா" என்னும் ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)நூல்
ஆ)நாடகம்
இ)நாக்கு
ஈ)நாள்
விடை : இ)நாக்கு
58.'கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)அரசன்
ஆ)அமைச்சர்
இ)பாவி
ஈ)கொல்லன்
விடை : அ)அரசன்
59.ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்
பொருளைக் குறிப்பிடுக 'வீ"
அ)காய்
ஆ)கனி
இ)மலராத
ஈ)பூ
விடை : ஈ)பூ
60. 'கா" என்னும் சொல்லின் பொருள் என்ன?
அ)காடு
ஆ)கவின்
இ)ஆறு
ஈ)சோலை
விடை : ஈ)சோலை
No comments:
Post a Comment