SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'சுக்கு" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைத்தொகை
ஆ)காலப்பெயர்
இ)வேற்றுமைத்தொகை
ஈ)குற்றியலுகரம்
விடை : ஈ)குற்றியலுகரம்

42.'மெய்ப்பொருள்"- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஆ)தொழிற்பெயர்
இ)வினைத்தொகை
ஈ)வேற்றுமைத்தொகை
விடை : அ)இருபெயரொட்டுப் பண்புத் தொகை

43.'உலகம்" - எனதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)இடவாகுபெயர்
ஆ)வினைத்தொகை
இ)வினைமுற்று
ஈ)பெயரெச்சம்
விடை : அ)இடவாகுபெயர்

44.'நெடுங்கடல்" -என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உரிச்சொல் தொடர்
ஆ)பண்புத் தொடர்
இ)ஆகுபெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)பண்புத் தொடர்

45.'கொள்வீர்"- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)ஏவனல் பன்மை வினைமுற்று
ஆ)தொழிற்பெயர்
இ)ஏவல் ஒருமை வினைமுற்று
ஈ)விளி வேற்றுமை
விடை : அ)ஏவனல் பன்மை வினைமுற்று

46.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'இந்தியாவின் தேவைகள் மிகத் தெளிவானவை"
அ)தேவைகள் என்றால் என்ன?
ஆ)இந்தியா வளர என்ன வழி?
இ)இந்தியாவின் தேவைகள் எப்படிப்பட்டவை?
ஈ)தெளிவும் தேவையும் எது?
விடை : இ)இந்தியாவின் தேவைகள் எப்படிப்பட்டவை?

47.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'நூலறிவால் நுண்ணறிவு பெறாலம்"
அ)நுண்ணறிவு என்றால் என்ன?
ஆ)நூலறிவு என்றால் என்ன?
இ)நூலறிவால் எதனைப் பெறலாம்?
ஈ)நுண்ணறிவு பெற யாது செய்தல் வேண்டும்?
விடை : இ)நூலறிவால் எதனைப் பெறலாம்?

48.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'படிப்பதென்றால் வள்ளுவரைப் படிக்க வேண்டும்"
அ)வள்ளுவரைப் படிக்க வேண்டுமா?
ஆ)எவ்வாறு படிக்க வேண்டும்?
இ)ஏன் படிக்க வேண்டும்?
ஈ)எதைப் படிக்க வேண்டும்?
விடை : ஈ)எதைப் படிக்க வேண்டும்?

49.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்"
அ)கெட்ட போரிடுதல் என்றால் என்ன?
ஆ)போரிட வேண்டுமா?
இ)எதனைச் சாய்ப்போம்?
ஈ)வேரொடு சாய்த்தல் என்றால் என்ன?
விடை : இ)எதனைச் சாய்ப்போம்?

50.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'விஞ்ஞானம் என்னும் அறிவுக்கலை இளைஞருள் பரவ வேண்டும்"
அ)அறிவுக்கலை ஏன் பரவ வேண்டும்?
ஆ)இளைஞருள் அறிவு பரவ வேண்டுவது எப்போது?
இ)விஞ்ஞானம் என்னும் அறிவுக்கலை யாரிடம் பரவ வேண்டும்?
ஈ)பரவ வேண்டியது விஞ்ஞானம் என்னும அறிவுக்கலையா?
விடை : இ)விஞ்ஞானம் என்னும் அறிவுக்கலை யாரிடம் பரவ வேண்டும்?




No comments:

Post a Comment