TNPSC பொதுத்தமிழ்
21.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க. பெருவரி ,புதரப்புயம்
அ)பண்புத்தொகை ,உவமைத்தொகை
ஆ)உவமைத்தொகை,பண்பத்தொகை
இ)பண்புத்தொகை,பண்புத்தொகை
ஈ)உவமைத்தொகை,உவமைத்தொகை
விடை : இ)பண்புத்தொகை,பண்புத்தொகை
22.இவற்றில் பண்புத்தொகையுடன் பொருந்தாத சொல் எது?
அ)பெருஞ்சிபும்
ஆ)தண்டளி
இ)திண்டிறல்
ஈ)வால்குழைத்து
விடை : ஈ)வால்குழைத்து
23.இவற்றில் வினையெச்சம் உடன் பொருந்தாத சொல் எது?
அ)எழுந்து
ஆ)புதைத்து
இ)வள்ளுகிர்புலி
ஈ)வணங்கி
விடை : இ)வள்ளுகிர்புலி
24.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)நனிமனம் - உரிச்சொல்தொடர்
ஆ)சிரமுகம் - உம்மைத்தொகை
இ)உயிர்செகுத்து - இரண்டாம் வேற்றுமைத் தொi
ஈ)மலரடி - உருவகம்
விடை : ஈ)மலரடி - உருவகம்
25.இவற்றில் எது தொழிற்பெயர் உடன் பொருந்தாத இலக்கணக்குறிப்பு
அ)வருபுணல்
ஆ)ஒழுகுதல்
இ)நோன்றல்
ஈ)பொறுத்தல்
விடை : அ)வருபுணல்
26.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்
அ)தமிழில் இலக்கணம் உண்டா?
ஆ)தமிழ் இலக்கணம் என்றால் என்ன?
இ)தமிழ் இலக்கணம் எத்தணை வகைப்படும்?
ஈ)தமிழ் எத்தமை வகைப்படும்?
விடை : இ)தமிழ் இலக்கணம் எத்தணை வகைப்படும்?
27.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்"
அ)எதை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
ஆ)எதனை உள்ளவும் நினைக்க வேண்டும்?
இ)எப்பொழுது உள்ளளவும் நினைக்க வெண்டும்?
ஈ)யாரை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
விடை : ஈ)யாரை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
28.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'காலில் புண் இருந்தது"
அ)கால் எங்கே இருந்தது?
ஆ)காலில் இருந்தது புண்ணா?
இ)காலில் புண்ணா இருந்தது?
ஈ)புண் எங்கே இருந்தது?
விடை : ஈ)புண் எங்கே இருந்தது?
29.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'கோபால் இதயம் விசாலமானது"
அ)உன் இதயம் எப்படிப்பட்டது?
ஆ)அவன் இதயம் விசாலமானதா?
இ)இதயம் என்றால் என்ன?
ஈ)யார் இதயம் விசாலமானது?
விடை : ஈ)யார் இதயம் விசாலமானது?
30.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'உழைத்தவர் பிழைப்பார்"
அ)உழைத்தவர் பிழைப்பாரா?
ஆ)யார் பிழைப்பார்?
இ)பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
ஈ)பிழைக்க உழைக்க வேண்டும்?
விடை : ஆ)யார் பிழைப்பார்?
No comments:
Post a Comment