SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல'
ஊவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)தீமை
ஆ)கடுமை
இ)வெறுமை
ஈ)நன்மை
விடை : ஈ)நன்மை

2.அத்திப் புத்தாற் போல - உவமையால் விளக்கப் தேர்ந்தெடுக்க
அ)தெரியாமை
ஆ)தேவை
இ)வியப்பு
ஈ)பாராட்டு
விடை : அ)தெரியாமை

3.குரங்கின் கையில் கிடைத்த கொள்ளி போல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)அழியாமை
ஆ)அழிப்பது
இ)தேடுதல்
ஈ)தெளிவு
விடை : ஆ)அழிப்பது

4.நகமும் சதையும் போல- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)இகழ்ச்சி
ஆ)புகழ்ச்சி
இ)ஒற்றுமை
ஈ)வேற்றுமை
விடை : இ)ஒற்றுமை

5.கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் ஸ்ரீ சீர்மோனையைக் கண்டறிக
அ)வேண்டும் - வருதாலால்
ஆ)கள்ளாமை - வேண்டும்
இ)கள்ளாமை - வருதலால்
ஈ)கள்ளாமை - கடிய
விடை : ஈ)கள்ளாமை - கடிய

6.வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும் - எதுகையைக் கண்டறிக
அ)வேந்தவனம் - ஒக்கில்
ஆ)வெங்தவனம் - ஒக்கும்
இ)ஒக்கில் - ஒக்கும்
ஈ)வெந்தவம் - இந்தவனம்
விடை : ஈ)வெந்தவம் - இந்தவனம்

7.தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழ்ந்தென் - அடி இயைபினைக் கண்டறிக
அ)தேனினும் - செந்தமிழ்
ஆ)மொழியே - மொழியே
இ)தேனினும் - இனியநற்
ஈ)இனியநற் - செந்தமிழ்
விடை : ஆ)மொழியே - மொழியே

8.முதிரையுஞ் சாமையும் வரகும் பொய்மணிக் குதிரைவா லியுங்களங் குவித்துக் குன்றெனப் - அடி எதுகையைக் கண்டறிக
அ)முதிரையுஞ் - குதிரைவா
ஆ)முதிரையுஞ் - சாமையும்
இ)சாமையும் - வரகும்
ஈ)சாமையும் - பொய்மணிக்
விடை : அ)முதிரையுஞ் - குதிரைவா

9.நானிலம் பரப்பும் சோதி
நாயகக் கடவுள் தம்மை - அடி மோனையைக் சுட்டுக
அ)நானிலம் - பரப்பும்
ஆ)நாயகக் - கடவுள்
இ)பரப்பும் - தம்மை
ஈ)நானிலம் - நாயகக்
விடை : ஈ)நானிலம் - நாயகக்

10.கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே - அடி இயைபினைக் கண்டறிக
அ)அம்மே - அம்மே
ஆ)கொல்லிமலை - செல்லிமலை
இ)கொல்லிமலை - எனக்கிளைய
ஈ)கொல்லிமலை - அம்மே
விடை : அ)அம்மே - அம்மே



No comments:

Post a Comment