TNPSC பொதுத்தமிழ்
91.கன்னி கண்ணி
அ)பழம் படம்
ஆ)பெண் ஆண்
இ)பெண் மாலை
ஈ)மணமாகாத பெண் மலர்மாலை
விடை : ஈ)மணமாகாத பெண் மலர்மாலை
92.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
அ)மாறி
ஆ)மாழி
இ)மாரி
ஈ)மாலி
விடை : இ)மாரி
93.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக: பனி
அ)குனி
ஆ)பொழுது
இ)வேளை
ஈ)குளிர்ச்சி
விடை : ஈ)குளிர்ச்சி
94.ஒலி வேறுபாடற்ந்து சரியான பொருளை தருக சீரிய
அ)சிறப்பான
ஆ)கேவித்த
இ)சீறுதல்
ஈ)வசை
விடை : அ)சிறப்பான
95.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக.அரம் அறம்
அ)பாம்பு ,கருவி
ஆ)சத்தம்,சமயம்
இ)கருவி,தருமம்
ஈ)தருமம்,கருவி
விடை : இ)கருவி,தருமம்
96.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக வேலை வேளை
அ)பணி,பொழுது
ஆ)பனி,பணி
இ)சமயம்,பணி
ஈ)பொழுது,கட்டு
விடை : அ)பணி,பொழுது
97.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக கரை கறை
அ)அலை,நீக்கு
ஆ)ஒரம்,அழுக்கு
இ)அழுக்கு,ஒரம்
ஈ)நீக்கு,விளிம்பு
விடை : ஆ)ஒரம்,அழுக்கு
98.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை
வெல்லம் வெள்ளம் வேழம்
அ)தண்ணீர் இனிப்பு புளி
ஆ)இனிப்பு தண்ணீர் யானை
இ)கசப்பு காரம் புலி
ஈ)புலி கசப்பு காரம்
விடை : ஆ)இனிப்பு தண்ணீர் யானை
99.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
குலவி குளவி குழவி
அ)மகிழ்ந்து குளம் குழவி கல்
ஆ)அன்பாக பேசு மாட்டுக்குளம்பு ட்டம்
இ)குலாவுதல் தேனீ குழுமு
ஈ)நெருங்கி ஒருவகைவண்டு குழந்தை
விடை : ஈ)நெருங்கி ஒருவகைவண்டு குழந்தை
100.அலி அளி அழி
அ)நீக்கு ஆண்மையற்றவன் கொடு
ஆ)அண்மையற்ற்வன் நீக்கு கொடு
இ)ஆண்மையற்றவன் கொடு நீக்கு
ஈ)கொடு நீக்கு ஆண்மையற்றவன்
விடை : இ)ஆண்மையற்றவன் கொடு நீக்கு
No comments:
Post a Comment