TNPSC பொதுத்தமிழ்
21.Patron என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)மெய்க்கபாப்பாளர்
ஆ)புரவலர்
இ)ஊர்க்காவலர்
ஈ)பொது மேலாளர்
விடை : ஆ)புரவலர்
22.Farmer என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)தொழிலாளி
ஆ)விவசாயி
இ)முதலாளி
ஈ)கடனாளி
விடை : ஆ)விவசாயி
23.Manager என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)தலைவர்
ஆ)தொழிலாளர்
இ)அங்கத்தினர்
ஈ)மேலாளர்
விடை : ஈ)மேலாளர்
24.Head Office என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)ஹெட் ஆபீஸ்
ஆ)தலைமை அலுவலகம்
இ)சார்பு அலுவலகம்
ஈ)கிளை அலுவலகம்
விடை : ஆ)தலைமை அலுவலகம்
25.Private Company என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)தனியார் மால்
ஆ)தனியார் அலுவலகம்
இ)தனியார் குழுமம்
ஈ)தனியார் கம்பெனி
விடை : இ)தனியார் குழுமம்
26.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
மருப்பு மறுப்பு
அ)தந்தம் எதிர்ப்பு
ஆ)சேவல் குறைப்பு
இ)மன்னன் உறக்கம்
ஈ)குதிரை நீக்கம்
விடை : அ)தந்தம் எதிர்ப்பு
27.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கலை களை
அ)ஆண்மான் அகற்று
ஆ)ஆடல் வண்ணம்
இ)பாடல் ஒசை
ஈ)வெளிச்சம் இருள்
விடை : அ)ஆண்மான் அகற்று
28.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொரி பொறி
அ)வளை ஏறு
ஆ)வீசு நோய்
இ)வறு இயந்திரம்
ஈ)பொரித்தல் புல்
விடை : இ)வறு இயந்திரம்
29.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொறுப்பு பொருப்பு
அ)மறுமொழி சிலை
ஆ)கடமை மலை
இ)நம்பிக்கை குன்று
ஈ)பரிவு சிகரம்
விடை : ஆ)கடமை மலை
30.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எல் எள்
அ)தேவர் உயருதல்
ஆ)இராத்திரி சரிப்பு
இ)கதிரவன் எண்ணெய் வித்து
ஈ)பொதுச் சொல் ஒரு பூண்டு
விடை : இ)கதிரவன் எண்ணெய் வித்து
No comments:
Post a Comment