SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.'கண்ணைக் காக்கும் இமை போல" என்ற உவமை விளக்கம் கருத்து யாது?
அ)காவலன்
ஆ)இமைத்தல்
இ)பாதுகாப்பு
ஈ)காவலர்
விடை : இ)பாதுகாப்பு

2.'நீர்குமிழி அன்ன வாழ்க்கை" என்னும் உவமை விளக்கம் கருத்து கண்டறிக
அ)மயக்கம்
ஆ)விளக்கம்
இ)வாழ்க்கை
ஈ)நிலையாமை
விடை : ஈ)நிலையாமை

3.'உமி குற்றிக் கைவருந்தல் போல"என்ற உவமை விளக்கும் கருத்து யாது?
அ)பயனற்ற செயல்
ஆ)வருத்தம்
இ)தூய்மை
ஈ)அவசியம்
விடை : அ)பயனற்ற செயல்

4.'பல துளி பெருவெள்ளம்" என்ற உவமை விளக்கும கருத்து கண்டறிக
அ)சேமிப்பு
ஆ)சேவை
இ)வெள்ளப்பெருக்கு
ஈ)செல்வம்
விடை : அ)சேமிப்பு

5.'மலர்க்கரம்" என்னும் சொல்லின் இலக்கண குறிப்பைக் கண்டறிக
அ)உம்மைத் தொகை
ஆ)உவமைத்தொகை
இ)உருவகம்
ஈ)அன்மொழித் தொகை
விடை : ஆ)உவமைத்தொகை

6.தொடரும் தொடர்பும் தேர்க
சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப் பெற்றவர்
அ)வீராமாமுனிவர்
ஆ)திரு.வி.கல்யாணசுந்தரம்
இ)சேக்கிழார்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்

7.'நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே" எனக் கூறியவர்
அ)திரு.வி.க
ஆ)பரதன்
இ)நக்கீரர்
ஈ)முருகன்
விடை : இ)நக்கீரர்

8.'கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு" என்ற தொடரைக் கூறியவர்
அ)பெரியார்
ஆ)காமராசர்
இ)மா.பொ.சி
ஈ)அறிஞர் அண்ணா
விடை : ஈ)அறிஞர் அண்ணா

9.'பரம்பிற் கோமான்" என்று அழைக்கப் பெற்றவர்
அ)குமணன்
ஆ)பாரி
இ)காரி
ஈ)அதிகமான்
விடை : ஆ)பாரி

10.'கொள்க" இலக்கண குறிப்பு தேர்க
அ)வினைச் சொல்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)வினையெச்சம்
விடை : இ)வியங்கோள் வினைமுற்று



No comments:

Post a Comment