TNPSC பொதுத்தமிழ்
81. "வை" என்னும் ஒரெழுத்தொரு மொழி உணர்த்தும் பொருள்
அ)படுத்தல்
ஆ)தொடுத்தல்
இ)எடுத்தல்
ஈ)வைத்தல்
விடை : ஈ)வைத்தல்
82.'நா" என்னும் ஒரெழுத்தொரு மொழி உணர்த்தும் பொருள்
அ)நான்
ஆ)தாக்கு
இ)நாக்கு
ஈ)நான்கு
விடை : இ)நாக்கு
83.நை - என்னும் ஒரெழுத்தொரு மொழி உணர்த்தும் பொருள்
அ)சொந்தம்
ஆ)பந்தம்
இ)இன்பம்
ஈ)துன்பம்
விடை : ஈ)துன்பம்
84.யா - என்னும் ஒரெழுத்தொரு மொழி உணர்த்தும் பொருள்
அ)பார்த்தல்
ஆ)யாத்தல்
இ)கேட்டல்
ஈ)காத்தல்
விடை : ஆ)யாத்தல்
85.'தா" என்னும் ஒரெழுத்தொரு மொழி உணர்த்தும் பொருள்
அ)தருதல்
ஆ)கேட்டல்
இ)வருதல்
ஈ)போதல்
விடை : ஆ)கேட்டல்
86.பிரித்தெழுதுக: 'சேவடி"
அ)சே + யடி
ஆ)சே + வடி
இ)சே + அடி
ஈ)செம்மை + அடி
விடை : ஈ)செம்மை + அடி
87.பிரித்தெழுதுக: பெருந்தெய்வம்
அ)பெருந் + தெய்வம்
ஆ)பெரு + தெய்வம்
இ)பெருமை + தெய்வம்
ஈ)பெரிய + தெய்வம்
விடை : இ)பெருமை + தெய்வம்
88.பிரித்தெழுதுக: விளக்கேற்றி
அ)விளக் + கேற்றி
ஆ)விளக்கு + ஏற்றி
இ)விளக்கேற் + றி
ஈ)வி + ளக்கேற்றி
விடை : ஆ)விளக்கு + ஏற்றி
89.பிரித்தெழுதுக: சிலம்பொன்று
அ)சிலம்பு + ஒன்று
ஆ)சிலம் + வொன்று
இ)சிலம்ப + ஒன்று
ஈ)சிலம்பொன் + று
விடை : அ)சிலம்பு + ஒன்று
90.பிரித்தெழுதுக: கையேந்தி
அ)கையே + ஏந்தி
ஆ)கையேந் + தி
இ)கை + ஏந்தி
ஈ)கைய் + ஏந்தி
விடை : இ)கை + ஏந்தி
No comments:
Post a Comment