SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 12, 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51. இதன்கண் யமைந்த தொடை எது?
கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ?
காய்கறி நெல்லம் விளைத்தவர் யாரோ?
குடிநீர் நிறைவம் சமைத்தவர் யாரோ?
கூடை குடிசை முடைந்தவர் யாரே?
அ)பதுகைத் தொடை
ஆ)முரண் தொடை
இ)இயைபுத் தொடை
ஈ)மோனைத் தொடை
விடை : இ)இயைபுத் தொடை

52.சோறு மணக்கும் மடங்களெலாம்
தொங்கல் மறைக்கும் தோள்களெலாம்
இயைபினைத் தேர்வு செய்க
அ)சோறு - தொங்கல்
ஆ)மறைக்கும் - மணக்கும
இ)எலாம் - எலாம்
ஈ)மறைக்கும் - மடங்கள்
விடை : இ)எலாம் - எலாம்

53.பின்வரும் பாவில் பயின்றுள்ள இயைபுகளைக் குறிப்பிடுக
எல்லோரும் இன்பமுறல் வேண்டும் வேண்டும்
என்றென்றும் தமிழாட்சி செய்தல் வேண்டும்
நல்ல தமிழ் தமிழரெலாம் பேசல் வேண்டும்
நந்தமிழில் அறிவியலைச் சேர்த்தல் வெண்டும்
அ)இன்பமுறல் வேண்டும்
ஆ)எல்லோரும் என்றென்றும்
இ)வேண்டும்,வேண்டும்,வேண்டும்,வேண்டும்
ஈ)அறிவியலைச் சேர்த்தல் வேண்டும்
விடை : இ)வேண்டும்,வேண்டும்,வேண்டும்,வேண்டும்

54.கீழ்க்காணும் அடிகளில் காணப்பபெறும் இயைபினைக் காண்க
எங்கள் தந்தையார் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
அ)எங்கள்- பேச்சினிலே
ஆ)எங்கள் - சக்தி
இ)பேச்சினிலே- மூச்சினிலே
ஈ)பேச்சினிலே - பிறக்குது
விடை : இ)பேச்சினிலே- மூச்சினிலே

55.அன்பே வாழ்க
தமிழே வாழ்க
இதில் அமைந்த தொடை யாது?
அ)மோனை
ஆ)எதுகை
இ)இயைபு
ஈ)செந்தொடை
விடை : இ)இயைபு

56.பொன்னிகர் மொழிதான் அவருக்குச் சொந்தம்
போற்றார் யாரெனினும் அவரும் பந்தம்
இதில் வந்துள்ள இயைபுத் தொடையை எழுதுக
அ)பொன்னிகர் - சொந்தம்
ஆ)போற்றார் - பந்தம்
இ)சொந்தம் - பந்தம்
ஈ)சொந்தம் - போற்றார்
விடை : இ)சொந்தம் - பந்தம்

57.கீழ்க்கண்டவற்றுள் இயைபுத் தொடர் எது?
அ)மன்னவன் கரிகால் வளவன் நீங்கிய நாள் இந்நகர் வோல்வதோர் இயல்பின தாகி
ஆ)அளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை இரவு போர்த்த இருள் நீங்க வில்லை
இ)அறப்போர் செய்குவதன்றிழ அரசிழக்க நேரினும் மறப்போர் செய்பவதற்யாது மறஞ்செறிந்த
ஈ)உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீகலும் நீங்கலா
விடை : ஆ)அளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை இரவு போர்த்த இருள் நீங்க வில்லை

58.கீழ்ககண்டவற்றுள் இயைபுத் மொடை எது?
அ)பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் பகையும் நீங்கி
ஆ)தோரண வீதியும் தோமரு கோட்டியும் பூரண கும்பமும் பொலம்பா விகைகுளும்
இ)பெரியோரை வியத்திலும் இலமே சிறியோமர இகழ்தல அதனினும் இலமே
ஈ)யாதும் ஊரே யாருவம் கேளிர் தீது நன்றும் பிறர்தர வாரா
விடை : இ)பெரியோரை வியத்திலும் இலமே சிறியோமர இகழ்தல அதனினும் இலமே

59.இயைபுத் தொடையை அறிக செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
அ)செந்தமிழ் - போதினிலே
ஆ)இன்டபத்தேன் - காதினிலே
இ)போதினிலே - வந்து பாயுது
ஈ)போதினிலே - காதினிலே
விடை : ஈ)போதினிலே - காதினிலே

60.கீழ்வரும் தொடரில் இயைபைக் குறிப்பிடு
சாதியெனும் சாக்கடையில் புழுப்போல் வாழ்ந்து
சமய வெறிச் சழக்குகளில் தடுமாறி வீழ்ந்து
அ)சாதியெனும் - புழுப்போல்
ஆ)சாதியெனும் - சமயவெறி
இ)சமயவெறி - சழக்குகளில்
ஈ)வாழ்ந்து - வீழ்ந்து
விடை : ஈ)வாழ்ந்து - வீழ்ந்து




No comments:

Post a Comment