SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அறிவார்ந்த மக்கட் பேறு
அ)முதனிலைத் தொழிற்பெயர்
ஆ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்

32.இவற்றில் எது தொழிற்பெயருக்கு பொருந்தாது?
அ)தொழிலுக்கு பெயராய் வரும்
ஆ)படர்க்கை இடத்தில வரும்
இ)மூவிடங்களில் வரும்
ஈ)காலங்காட்டாது
விடை : இ)மூவிடங்களில் வரும்

33.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க ஆன்ற  பொரும ,கேட்க
அ)தொழிற்பெயர்,வியங்கோள் வினை முற்று
ஆ)வியங்கோள் வியங்கோள்,தொழிற்பெயர்
இ)பெயரெச்சம் வியங்கோள் வினைமுற்று
ஈ)வியங்கோள் வினைமற்று பெயரெச்சம்
விடை : இ)பெயரெச்சம் வியங்கோள் வினைமுற்று

34.கேளாத் தகையே
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)எண்ணும்மை
இ)வியங்கேள் வினைமுற்று
ஈ)உரிச்சொல்
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

35.இவற்றில் பொருந்தாத இணையை கண்டறிக:
அ)செழியன் - பெயரெச்சம்
ஆ)பாடாத - உதிர்மறைப் பெயரெச்சம்
இ)தீர்த்த செழியன் - தொழிற்பெயர்
ஈ)எதிரிலாக்கவி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : இ)தீர்த்த செழியன் - தொழிற்பெயர்

36.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான அணையைத் தேர்வு செய்க உயர்துலை,நெடுமதில்
அ)உரிச்சொற்றெடர்,ஈறுகெட்ட எதிர்மறைப் பயெரெச்சம்
ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் உரிச்சொற்றொடர்
இ)வினைத்தொகை,பண்புத்தொகை
ஈ)பண்புத்தொகை,வினைத்தொகை
விடை : இ)வினைத்தொகை,பண்புத்தொகை

37.சொல் என்பதன் வேறுபெயர்களில் பொருந்தாது
அ)பொருள்
ஆ)பதம்
இ)மொழி
ஈ)கிளவி
விடை : அ)பொருள்

38.தில்,மன்,பிற
அ)பெயர்ச் பகாப்பதம்
ஆ)வினைப் பகாப்பதம்
இ)இடைப்பாகாப்பதம்
ஈ)உரிப் பகாப்பதம்
விடை : இ)இடைப்பாகாப்பதம்

39.ப்.வ் என்பன
அ)இறந்தகால இடைநிலை
ஆ)எதிர்கால இடைநிலை
இ)எதிர்மறை இடைநிலை
ஈ)நிகழ்கால இடைநிலை
விடை : ஆ)எதிர்கால இடைநிலை

40.பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது
அ)சந்தி
ஆ)சாரியை
இ)விகாரம்
ஈ)பகுதி
விடை : ஆ)சாரியை




No comments:

Post a Comment