SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)கலெக்டர் ஆபிஸிற்குச் சென்றேன்
ஆ)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றேன்
இ)ஆட்சியாளர் ஆபிஸிற்குச் சென்றேன்
ஈ)கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றேன்
விடை : ஆ)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றேன்

22.'நமஸ்கரம்" என்னும் சொல்லுக்குத் தமிழ்சொல் கண்டறிக
அ)ஊக்கம்
ஆ)பணிதல்
இ)வணக்கம்
ஈ)எழுதுல்
விடை : இ)வணக்கம்

23.எவ்வகைத்தொடர் எனத் தேர்ந்து எழுதுக
'உமறுப்புலவர் சீறாப்புராணம் இயற்றினார்"
அ)செயப்பாட்டு வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செய்வினை
விடை : ஈ)செய்வினை

24.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)வேய்
ஈ)மருதம்
விடை : இ)வேய்

25.'என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறியவர்
அ)சுந்தரர்
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)திருஞானசம்பந்தர்
விடை : இ)திருநாவுக்கரசர்

26.ஏற்ற வேற்றுமை உருபை இணைக்க
'வேலன் மரம் வெட்டினான்"
அ)ஐ
ஆ)ஆல்
இ)அது
ஈ)கு
விடை : அ)ஐ

27.திருமுறைகளைத் தொகுத்தவர்
அ)சேக்கிழார்
ஆ)நம்பியாண்டார் நம்பி
இ)சிவஞான முனிவர்
ஈ)திருநாவுக்கரசர்
விடை : ஆ)நம்பியாண்டார் நம்பி

28.'முப்பால்" என வழங்கப்படும் நூல்
அ)நாலடியார்
ஆ)இன்னா நாற்பது
இ)திருக்குறள்
ஈ)பழமொழி
விடை : இ)திருக்குறள்

29.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளின் வரிசையை அறிக
பனி                பணி     பழி
அ)பனித்துளி      வேலை    இழிவு
ஆ)உள்ளம்       அறிவு    அறம்
இ)ஊக்கம்;       தொழில்   ஆற்றல்
ஈ)கல்வி         காரியம்    கணக்கு
விடை : அ)பனித்துளி      வேலை    இழிவு

30.'நல்லோர்" என்பதன் எதிர்சொல் தேர்க
அ)தீயோர்
ஆ)வல்லோர்
இ)கயவர்
ஈ)பெரியோர்
விடை : அ)தீயோர்




No comments:

Post a Comment