SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.கம்பெனி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
அ)தொழிற்சாலை
ஆ)தொழில நிலையம்
இ)குழுமம்
ஈ)கூட்டுத் தொழில்
விடை : இ)குழுமம்

92.மரபுப் பிழை வழுஉச் சொற்களை நீக்கிய சொல்லை எழுதுக
அ)குதிரை கனைக்கும்
ஆ)பசு உறுமும்
இ)பன்றி ஊளையிடும்
ஈ)நாய் கத்தும்
விடை : அ)குதிரை கனைக்கும்

93.மரபுப் பிழை வழுவுச் சொற்களை நீக்கிய சொல்லை எழுதுக
அ)பசு உறுமும்
ஆ)கோழி கொக்கரிக்கும்
இ)குருவி அலறும்
ஈ)வாத்து பேசும்
விடை : ஆ)கோழி கொக்கரிக்கும்

94.மரபுப் பிழை வழுவுச் சொற்களை நீக்கிய சொல்லை எழுதுக
அ)எலிக்குட்டி
ஆ)கீரிக் குஞ்சு
இ)பசுக்குட்டி
ஈ)பூனைக் குட்டி
விடை : ஈ)பூனைக் குட்டி

95.இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - இத்தொடரில் மோனை அமையாத சொற்கள்
அ)இனிது - காண்பான்
ஆ)இன்சொல் - இனிது
இ)சிறுமை - மறுமை
ஈ)நீங்கிய - இன்சொல்
விடை : இ)சிறுமை - மறுமை

96.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் - இத் தொடரில் எதுகை அமைந்த சொற்கள்
அ)சிறுமை - இன்சொல்
ஆ)இன்சொல் - மறுமை
இ)சிறுமை - மறுமை
ஈ)நீங்கிய - இன்சொல்
விடை : அ)சிறுமை - இன்சொல்

97.உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
அ)உப்புத் தின்றவன் என்ன செய்வான்?
ஆ)உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பது ஏன்?
இ)ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஈ)ஏன் உப்பைத் தின்ன வேண்டும்?
விடை : அ)உப்புத் தின்றவன் என்ன செய்வான்?

98.அறிவு அற்றம் காக்கும் கருவி - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
அ)அழிவில் இருந்து காக்கும் கருவி எது?
ஆ)அற்றம் என்பது என்ன?
இ)அற்றம் என்பது என்ன வகைக் கருவி?
ஈ)அறிழவு தெ;தகைய அற்றங்களைக் காக்கும்?
விடை : அ)அழிவில் இருந்து காக்கும் கருவி எது?

99.படி இதன் வினைமுற்றைத் தேர்க
அ)படி
ஆ)படித்த
இ)படித்து
ஈ)படித்தான்
விடை : ஈ)படித்தான்

100.செய் இதன் வினை முற்றைத் தேர்க
அ)செய்தான்
ஆ)செய்த
இ)செய்து
ஈ)செய்யும்
விடை : அ)செய்தான்




No comments:

Post a Comment