SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வழூஉச் சொற்களை நீக்குதல்:
அ)கொஞ்ச நஞ்ச
ஆ)கொஞ்சம் நஞ்சம்
இ)கொஞ்ச நஞ்சம்
ஈ)கொஞ்ச நஞ்சல்
விடை : ஆ)கொஞ்சம் நஞ்சம்

62.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)முருங்கையிலை,பனந்தழை
ஆ)முருங்கைக்கீரை,பனையோலை
இ)முருங்கைத் தழை,பனங்கீற்று
ஈ)முரங்கை ஒலை,பனை ஒலை
விடை : ஆ)முருங்கைக்கீரை,பனையோலை

63.மரபுப் பிழையை நீக்குக:
அ)மாங்காய் பிஞ்சு
ஆ)மாங்காய்க காய்
இ)மாங்காய் வடு
ஈ)மாவடு
விடை : ஈ)மாவடு

64.மரபுப் பிழையை நீக்குக:
அ)கோழி கொக்கரிக்கும்
ஆ)கோழி கூவும்
இ)கோழி கத்தும்
ஈ)கோழி கரையும்
விடை : அ)கோழி கொக்கரிக்கும்

65.மரபுப் பிழையை நீக்குக:
அ)தென்னங்குட்டி
ஆ)தென்னங்கன்று
இ)தென்னைக் கன்னு
ஈ)தென்னம்பிள்ளை
விடை : ஈ)தென்னம்பிள்ளை

66.மரபுப் பிழையை நீக்குக:
அ)யானை கத்தும்
ஆ)யானை அகவும்
இ)யானை குரைக்கும்
ஈ)யானை பிளிறும்
விடை : ஈ)யானை பிளிறும்

67.வழூஉச் சொற்களை நீக்குக:
அ)தலையணையைத் தாவாரத்தில வச்சேன்
ஆ)தலையணையைத் தாழ்வாரத்தில வைத்தேன்
இ)தலகாணியைத் தாழ்வாரத்தில வைத்தேன்
ஈ)தலை அணியைத் தாழ்வாரத்தில வைத்தேன்
விடை : ஆ)தலையணையைத் தாழ்வாரத்தில வைத்தேன்

68.வழூஉச் சொற்களை நீக்குதல்
அ)அவரக்காய எனக்கு உயிர்
ஆ)அவர் அக்காய் எனக்கு உயிர்
இ)அவரைக்காய் என்றாலே எனக்கு உயிர்
ஈ)அவரக்கா நேக்கு உயிர்
விடை : இ)அவரைக்காய் என்றாலே எனக்கு உயிர்

69.வழூஉச் சொற்களை நீக்குதல்"
அ)நேற்று அடை மழை பெஞ்சது
ஆ)நேற்று அடைமழை பெய்தது
இ)நேற்று அடமழை பெய்தது
ஈ)நேற்று அடமலை பெய்தது
விடை : ஆ)நேற்று அடைமழை பெய்தது

70.வழூஉச் சொற்களை நீக்குதல்
அ)அவறுவா மனை
ஆ)அரிவாள் மனை
இ)அறுவாள் மனை
ஈ)அறுவாள் மன
விடை : ஆ)அரிவாள் மனைNo comments:

Post a Comment