SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'ஆலும் வேலும் பல்லுக்குறுதி"
அ)பல்லுக்கு உறுதி வேண்டுமா?
ஆ)எவை எவை பல்லுக்கு உறுதி?
இ)பல் உறுதி பெற என்ன செய்வாய்?
ஈ)ஆல்,வேல்,என்றால் என்ன?
விடை : ஆ)எவை எவை பல்லுக்கு உறுதி?
102.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுதல்
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்
அ)கம்பன் கவி யாடுவானா?
ஆ)கம்பன் கல்வி எத்தனையது?
இ)கம்பன் எதில் பெரியவன்?
ஈ)கம்பரை அறிய உதவம் பழமொழி எது?
விடை : ஈ)கம்பரை அறிய உதவம் பழமொழி எது?
103.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
அ)நட்பிலக்கண் உதாரணம் யார்?
ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த புலவர் யார்?
இ)நட்புக்கு சிறப்பானவர் யார்?
ஈ)நட்புக்குச் சிறந்த புலவர் யார்?
விடை : ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த புலவர் யார்?
104.'திருக்குறளின் பெருமை சொல்லற்கரியது" எவ்வகை வாக்கியம்?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
105.சிலப்பதிகாரத்தில எத்தனை காண்டங்கள் உள்ளன?
இது எவ்வகை வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
106.எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
'ஆ! என்னே மதுரை கோபுரத்தின் அழகு"
அ)கலவை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)உணர்சசி வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
107.தேவி எழுந்து திருக்குறளைப படி - எவ்வகை வாக்கியம்
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்
108.அடக்கம் அமரருள் உய்க்கும் - இது எவ்வகை வாக்கியம்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
109.வினைச் சொல்லின வகை அறிக
பாரதியார் விடுதலை உணர்வை ஊட்டினார்
அ)தன்விணை
ஆ)எதிர்மறை வினை
இ)பிறவினை
ஈ)செய்பபாட்டு வினை
விடை : அ)தன்விணை
110.நான் கவிதை படைத்தேன் - வாக்கியத்தின் வகை அறிக
அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)எதிர்மறை வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)செய்வினை வாக்கியம்



No comments:

Post a Comment