TNPSC பொதுத்தமிழ்
61. Custom : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வழக்கம்
ஆ)பழக்கம்
இ)பயிற்சி
ஈ)விளக்கம்
விடை : அ)வழக்கம்
62. Reference : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)குறிப்பேடு
ஆ)பொழிப்புரை
இ)விளக்கவுரை
ஈ)குறிப்பு
விடை : ஈ)குறிப்பு
63. Introduce : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)அறிமுகம்
ஆ)அறிமுகப்படுத்தியவர்
இ)பன்முகம்
ஈ)நேர்முகம்
விடை : அ)அறிமுகம்
64. Information : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)தகவல்
ஆ)வெளிப்படுத்துதல்
இ)தொலைதல்
ஈ)அறைதல்
விடை : அ)தகவல்
65. Continue : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)இயல்பாக
ஆ)தொடர்ச்சியாக
இ)விரைவாக
ஈ)வேகமாக
விடை : ஆ)தொடர்ச்சியாக
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கரி கறி
அ)கார்ப்பு துண்டு
ஆ)கரும்பலகை புகைவண்டி
இ)மரக்கரி காய்கறி
ஈ)படி நிலம்
விடை : இ)மரக்கரி காய்கறி
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
சொரி சொறி
அ)கரிப்பு அழிதல்
ஆ)பொழிதல் அரிப்பு
இ)உவர்ப்பு கூறுதல்
ஈ)துவர்ப்பு ஒழிதல்
விடை : ஆ)பொழிதல் அரிப்பு
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உரை உறை
அ)சொல் மூடி
ஆ)கல் படி
இ)வாழை நெல்
ஈ)கிழங்கு கழுகு
விடை : அ)சொல் மூடி
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வளி வழி
அ)காற்று பாதை
ஆ)ஆகாயம் பேதை
இ)மேகம் காதை
ஈ)விண்மீன் ராதை
விடை : அ)காற்று பாதை
70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உளை உழை
அ)சேறு மான்
ஆ)பயறு காடு
இ)சோறு கடவுள்
ஈ)கூன் வளை
விடை : அ)சேறு மான்
No comments:
Post a Comment