TNPSC பொதுத்தமிழ்
61.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல்
அ)குறவஞ்சி
ஆ)பரணி
இ)அந்தாதி
ஈ)கலம்பகம்
விடை : ஈ)கலம்பகம்
62.பிரித்து எழுதுக: சரியான விடையைத் தேர்க 'மழுவெடுத்து"
அ)மள + வெடுத்து
ஆ)மழும் + எடுத்து
இ)மழு + எடுத்து
ஈ)மழுவு + எடுத்து
விடை : இ)மழு + எடுத்து
63.'முத்துதிரும்" என்ற சொல் இவ்வாறு பிரியும்
அ)முத்து + உதிரும்
ஆ)முத்து + உதிரு + உம்
இ)முத் + துதிரும்
ஈ)மு + த் + துதிரும்
விடை : அ)முத்து + உதிரும்
64.'நம்மூர்" என்னுஞ் சொல்லைப் பிரித்து தேர்க
அ)நம்ம + ஊர்
ஆ)நம் + மூர்
இ)நம் + அம் + ஊர்
ஈ)நம் + ஊர்
விடை : ஈ)நம் + ஊர்
65.'நா" என்னும் ஒரேழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)நூல்
ஆ)நாடகம்
இ)நாள்
ஈ)நாக்கு
விடை : ஈ)நாக்கு
66.'கோ" என்ற சொல்லின் ஒரேழுத்து ஒரு மொழியைக் குறியிடுக
அ)கோழி
ஆ)அரசன்
இ)கோயில்
ஈ)கோட்டான்
விடை : ஆ)அரசன்
67.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறியிடுக 'பூ"
அ)பூமிழ
ஆ)நிலம்
இ)மணம்
ஈ)மலர்
விடை : ஈ)மலர்
68.வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கண்டான்
அ)கண்டது
ஆ)கண்டன
இ)காண்
ஈ)காண்பன
விடை : இ)காண்
69.வேர்ச்சொல்லைத் தேர்க 'கெடுவான்"
அ)கெடுத்த
ஆ)கெட்ட
இ)கெடுத்து
ஈ)கெடு
விடை : ஈ)கெடு
70.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக : உண்
அ)உண்டு
ஆ)உண்ட
இ)உண்க
ஈ)உண்ணல்
விடை : அ)உண்டு
No comments:
Post a Comment