SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31. பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது?
அ)காபி பார்
ஆ)டீ ஸ்டால்
இ)பரிண்டிங் பிரஸ்
ஈ)முடி திருத்தகம்
விடை : ஈ)முடி திருத்தகம்

32.உலகப் பொதுமறை - எனப் போற்றப்படும் நூல்
அ)திருவருட்பா
ஆ)திருவாசகம்
இ)திருக்குறள்
ஈ)கம்ப இராமயணம்
விடை : இ)திருக்குறள்

33.பொருத்துக
1.தேம்பாவணி    அ.முடியரசன்
2.இராமாயணம்   ஆ.வீரமாமுனிவர்
3.பெரியபுராணம்   இ.கம்பர்
4.பூங்கொடி      ஈ.சேக்கிழார்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

34.'பகுத்தறிவுப் பகலவன்" என்று போற்றப்படுபவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)கலைஞர் கருணாநிதி
இ)தந்தை பெரியார்
ஈ)மு.வரதராசனார்
விடை : இ)தந்தை பெரியார்

35.'படிக்காத மேதை" என்று போற்றப்படுபவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)கலைஞர் கருணாநிதி
இ)தந்தை பெரியார்
ஈ)மு.வரதராசனார்
விடை : அ)அறிஞர் அண்ணா

36. இசையின் இனிமையை அறியாதார் யார்? - எவ்வகை வாக்கயிம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

37.'முதுமக்கள்"- இலக்கணக் குறிப்பு தருக
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : ஆ)பண்புத்தொகை

38.வழங்கலும துய்த்தலும் - இலக்கணக் குறிப்பு தருக
அ)உவமைத்தொகை
ஆ)உம்மைத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)பண்புத்தொகை
விடை : இ)எண்ணும்மை

39. வைத்தான் - வேர்ச்சொல் தருக?
அ)வைத்த
ஆ)வை
இ)வைத்து
ஈ)வைத்தல்
விடை : ஆ)வை

40.ஈன்ற இலக்கணக் குறிப்பு தருக
அ)வினையெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)வினைமுற்று
ஈ)தொழிறபெயர்
விடை : ஆ)பெயரெச்சம்




No comments:

Post a Comment