SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.செயப்பாட்டு வினை வாக்கியத்தை கண்டறிக
அ)வேலன் மரத்தை வெட்டினான்
ஆ)மரம் வேலனால் வெட்டப்பட்டது
இ)வேலன் மரத்தை வெட்டு
ஈ)மரம் வேலனால் வெட்டு
விடை : ஆ)மரம் வேலனால் வெட்டப்பட்டது

2.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)மாதவி நடனம் கற்பித்தாள்
ஆ)மாதவி நடனம்ட கற்றாள்
இ)மாதவி நடனம் கற்பாள்
ஈ)மாதவி நடனம் கற்றுள்ளாள்
விடை : ஆ)மாதவி நடனம்ட கற்றாள்

3.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)உழவன் வயலை உழுவித்தார்
ஆ)உழவன் வயலை உழுதார்
இ)உழவன் வயலை உழுவார்
ஈ)உழவன் வயலை உழார்
விடை : அ)உழவன் வயலை உழுவித்தார்

4.புறநானூறு என்ற தொடரைப் பிரிக்கும் முறை
அ)புறம் +  நான்கு +  நூறு
ஆ)புற +  நானூறு
இ)புறநா +  நூறு
ஈ)புற + நான்கு +   நூறு
விடை : அ)புறம் +  நான்கு +  நூறு

5.செயப்பாட்டு வினையைக் காண்டறிக
அ)மூவர் வோரத்தை இயற்றினர்
ஆ)தேவாரம் மூவரால் இயற்றப்பட்டது
இ)மூவர் இயற்றினர் தேவாரத்தை
ஈ)தேவாரத்தை இயற்றினர் மூவர்
விடை : ஆ)தேவாரம் மூவரால் இயற்றப்பட்டது

6.நீ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)நீங்கள்
ஆ)நிகர்
இ)நீங்குதல்
ஈ)நிருமிகம்
விடை : இ)நீங்குதல்

7.'மே" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)அகம்
ஆ)ஆடு
இ)புறம்
ஈ)அன்பு
விடை : ஈ)அன்பு

8.'பா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பாடல்
ஆ)ஆடல்
இ)நாடல்
ஈ)பாடுதல்
விடை : அ)பாடல்

9.'சோழன் சேக்கிழாரை வரவேற்றான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டுவினை வாக்கியம்
விடை : இ)செய்வினை வாக்கியம்

10.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வன்றொடர் வன்றொண்டர் வண்டமிழ்,வங்கி
ஆ)வங்கி,வண்டமிழ்,வன்றொடர்,வன்றொண்டர்
இ)வண்டமிழ்,வங்கி,வன்றொண்டர்,வன்றொடர்
ஈ)வன்றொண்டர்,வன்றொடர்,வங்கி,வண்டமிழ்
விடை : ஆ)வங்கி,வண்டமிழ்,வன்றொடர்,வன்றொண்டர்



No comments:

Post a Comment