TNPSC பொதுத்தமிழ்
61.'ஆஸ்பத்திரி" - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)ஆசுபத்திரி
ஆ)மருத்துவமனை
இ)வீட்டு மனை
ஈ)விடுதி
விடை : ஆ)மருத்துவமனை
62.Liver - இவ்வாங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்?
அ)நுரையீரல்
ஆ)கல்லீரல்
இ)மண்ணீரல்
ஈ)இதயம்
விடை : ஆ)கல்லீரல்
63.'ரிஜிஸ்டர் போஸ்ட்" என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் அறிக
அ)பதிவு அஞ்சல்
ஆ)பதிவுக் கடிதம்
இ)பதிவுத் தபால்
ஈ)பதிவுக் கார்டு
விடை : அ)பதிவு அஞ்சல்
64.News paper - எனற் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எழுதுக
அ)செய்தித்தாள்
ஆ)செய்தி வெளியீடு
இ)நாள் வெளியீடு
ஈ)செய்தித் தொகுப்பு
விடை : அ)செய்தித்தாள்
65.லீவு லெட்டர் - என்ற ஆங்கிலச் சொல்லக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறிக்க
அ)லீவ் விண்ணப்பம்
ஆ)விடுமுறை லெட்டர்
இ)விடுமுறை கடிதம்
ஈ)விடுமுறை விண்ணப்பம்
விடை : ஈ)விடுமுறை விண்ணப்பம்
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இலை இளை
அ)காம்பு - கிளை
ஆ)தழை - மெலி
இ)மெலித்ல் - இளைஞன்
ஈ)செடி - இழை
விடை : ஆ)தழை - மெலி
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வால் வாள்
அ)அம்பு கூர்மை
ஆ)விலங்குறுப்பு கருவி
இ)கருவி வெண்மை
ஈ)கருவி கத்தி
விடை : ஆ)விலங்குறுப்பு கருவி
68.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளைத் தேர்க
ஊண் ஊன்
அ)உணவு சாதம்
ஆ)உணவு இறைச்சி
இ)சாப்பாடு கறி
ஈ)சாதம் கறி
விடை : ஆ)உணவு இறைச்சி
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
மரம் மறம்
அ)பறவை அச்சு
ஆ)தாவரவகை வீரம்
இ)காலம் கடவுள்
ஈ)உணர்வு பேசுதல்
விடை : ஆ)தாவரவகை வீரம்
70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொரி பொறி
அ)நெல்பொரி இயற்திரம்
ஆ)பொரித்தல் புல்
இ)வீசு நோய்
ஈ)வளை ஏறு
விடை : அ)நெல்பொரி இயற்திரம்
No comments:
Post a Comment