TNPSC பொதுத்தமிழ்
71.பிரித்தெழுதுக 'அரவணை"
அ)அர + அணை
ஆ)அரவு + அணை
இ)அரம் + அணை
ஈ)அர + வணை
விடை : ஆ)அரவு + அணை
72.பிரித்தெழுதுக 'பைந்தமிழ்"
அ)பை + தமிழ்
ஆ)பைந் + தமிழ்
இ)பசுமை + தமிழ்
ஈ)பசு + தமிழ்
விடை : இ)பசுமை + தமிழ்
73.'சிற்றூர்" பிரித்தெழுதுக
அ)சிற்று + ஊர்
ஆ)சிறுமை + ஊர்
இ)சிறய + ஊர்
ஈ)சிறு + ஊர்
விடை : ஆ)சிறுமை + ஊர்
74.பிரித்தெழுதுக 'அருட்டிறம்"
அ)அருள் + திறம்
ஆ)அரு + திறம்
இ)அருளு + அறம்
ஈ)அருட்ட + அறம்
விடை : அ)அருள் + திறம்
75.பிரித்தெழுதுக 'வெங்கனல்"
அ)வெம் + கனல்
ஆ)வெம்மை + கனல்
இ)வெ + கனல்
ஈ)வெம்மைக்கு + அனல்
விடை : ஆ)வெம்மை + கனல்
76.'மூழ்குதல்" என்ற சொல்லின் எதிர்ச்சொல் கூறுக
அ)உவத்தல்
ஆ)சினத்தல்
இ)மிதத்தல்
ஈ)நகர்தல்
விடை : இ)மிதத்தல்
77.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக 'புதுமை"
அ)புதியன
ஆ)பழையன
இ)புன்மை
ஈ)பழமை
விடை : ஈ)பழமை
78.பொறாமை - எதிர்ச்சொல் எழுதுக
அ)அடங்காமை
ஆ)அழுக்காறின்மை
இ)அவாவின்மை
ஈ)புறங்கூறாமை
விடை : ஆ)அழுக்காறின்மை
79.அறியாமை - எதிர்ச்சொல் எழுதுக
அ)அறிவுடமை
ஆ)முயற்சியின்மை
இ)கூடா ஒழுக்கம்
ஈ)பண்பின்மை
விடை : அ)அறிவுடமை
80.எதிர்ச்சொல்லை எடுத்தெழுது - எள்ளுதல்
அ)புகழ்தல்
ஆ)இகழ்தல்
இ)தண்டித்தல்
ஈ)சிரித்தல்
விடை : அ)புகழ்தல்
No comments:
Post a Comment