SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'குட் பாய்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லை அறிக
அ)போபக்காரன்
ஆ)விளையாட்டுப் பையன்
இ)கெட்ட பையன்
ஈ)நல்ல பையன்
விடை : ஈ)நல்ல பையன்

32.'பேக்கிங் சார்ஜ்" - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
அ)கட்டுமானக்கூலி
ஆ)பதிவு வரி
இ)பேக்கிங் கூலி
ஈ)கட்டுமாத்தொகை
விடை : ஈ)கட்டுமாத்தொகை

33.Balanced Diet - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தேர்க
அ)சமச்சீர் உணவு
ஆ)சரியான உணவு
இ)நல்ல உணவு
ஈ)ஆரோக்கிய உணவு
விடை : அ)சமச்சீர் உணவு

34.'ஜடன்டிபிகேஷன் சர்டிபிகேட்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் கூறுக
அ)ஆளறி மனு
ஆ)அடையாள அட்டை
இ)ஆளறி சான்றிதழ்
ஈ)அடையாளச் சீட்டு
விடை : இ)ஆளறி சான்றிதழ்

35.பிறமொழிச் சொற்கள் நீக்கிய சொல்லை எழுதுக
அ)அவன்தினமும் மார்க்கெட்டுக்குப் போகின்றான்
ஆ)அவன் தினமும் அங்காடிக்குப் போகின்றான்
இ)அவன் தினமும் கடைக்குப் போகின்றான்
ஈ)அவன் தினமும் கடைததெருவுக்குப் போகின்றான்
விடை : ஈ)அவன் தினமும் கடைததெருவுக்குப் போகின்றான்

36.சீரிய,சீறிய என்பனவற்றின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் கூறுக
அ)மேலான ,கோபித்த
ஆ)காலம்,உணர்வு
இ)கல்,தழை
ஈ)வீரம்,மரம்
விடை : அ)மேலான ,கோபித்த

37.அறம்,அரம் என்பனவற்றின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் கூறுக
அ)தருதல்,தேடுதல்
ஆ)தருமம்,கருவி
இ)செய்தல்,பார்த்தல்
ஈ)கூடுதல்,பயத்தல்
விடை : ஆ)தருமம்,கருவி

38.மறம்,மரம் என்பனவற்றின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் கூறுக
அ)கொடு,கெடு
ஆ)வீரம்,தாவரம்
இ)தானம்,மாடு
ஈ)தனம்,தேடு
விடை : ஆ)வீரம்,தாவரம்

39.கரி,கறி என்பனவற்றிலன் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் கூறுக
அ)சான்று உணவு
ஆ)யானை,காய்கறி
இ)கருமை,சமையல்
ஈ)எரிபொருள் ,குறை
விடை : ஆ)யானை,காய்கறி

40.விளை,விழை என்பனவற்றின் ஒலிவேறுபாடறிந்து சரியான பொருள் கூறுக
அ)பயன்,நட்பு
ஆ)உண்டாக்கு,விரும்பு
இ)பழம்,பள்ளம்
ஈ)விளைச்சல்,புணர்ச்சி
விடை : ஆ)உண்டாக்கு,விரும்பு



No comments:

Post a Comment