SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.விருந்தினரை ஒம்புதல் சங்கமரபு - எவ்வகை வாக்கியம் ?
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

42.சிலப்பதிகாரத்தில எத்தனை காதைகள் உள்ளன ? இது எவ்வகை வாக்கியம் ?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்

43.சிதம்பரனார் செய்ந்நன்றி மறவாச் செம்மல் எவ்வகை வாக்கியம் ?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாகக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)செய்தி வாகக்கியம்

44."மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக" எவ்வகை வாக்கியம் ?
அ)வினா வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

45.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'ஆ! என்னே தாஜ்மகாலின் அழகு"
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

46.உழவன் நிலத்தை உழுதான் - வாக்கியத்தின் வகை அறிக
அ)தன்வினை வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கியம்

47.வினைச் சொல்லின் வகை அறிக
'தாய் மகளை உண்பித்தாள்"
அ)செய்வினை
ஆ)எதிர்மறை வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை

48.ஒவியம் ஒவியரால் வரையப்பட்டது" - வினைச் சொல்லின் வகை அறிக
அ)பறிவினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)எதிர்மறை வினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை

49.'கவிதைகள் கவிஞனால் படைக்கப்பட்டவை"- வாக்கிய வகை குறிப்பிடுக
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : இ)செயப்பாட்டு வினை

50.'திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது"- இது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை 



No comments:

Post a Comment