இந்திய வரலாறு
1. குஷாணர்களின் பூர்வீகம் எது?
சீனா
2. குஷாண மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
குஜலா காட்பீசசு (எ) முதலாம் காட்பிசஸ்
3. குஷாண மரபில் சிறந்த அரசர் யார்?
கனிஷ்கர்
4. குஷாண மரபில் கடைசி அரசர் யார்?
வாசுதேவர்
5. குஜலா காட்பீசசுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரது மகனின் பெயர் என்ன?
வீமா காட்பீசசு (எ) இரண்டாம் காட்பீசசு
6. "முழு உலகையும் வென்ற தலைவன்" என்ற பெயர் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குஷாண மன்னர் யார்?
வீமா சாட்பீசசு
7. மகாராசாஇ இராசாதிராசாஇ மற்றும் மகேசுவரா என்ற பட்ட பெயரை கொண்ட குஷாண மன்னர்?
வீமா காட்பீசசு
8. கி.பி.78-இல் சக சகாப்;தத்தை தொடங்கி வைத்த குஷாண மன்னன் யார்?
கனிஷ்கர்
9. கனிஷ்கரின் தலைநகர் எது?
பெஷாவர் என்ற புருஷபுரம்
10. கனிஷ்கர் சார்ந்து இருந்த சமயம் எது?
புத்த சமயம்
11. கனிஷ்கரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் யார்?
அசுவகோஷர்
12. அசுவகோஷரை கனிஷ்கர் எந்த படையெடுப்பின் போது அழைத்து வந்தார்?
மகத படையெடுப்பின் போது
13. கனிஷ்கர்————என்ற புதிய தலைநகரை நிர்மானித்தார்.
கனிஷ்கபுரம்
14. கனிஷ்கர்————என்ற சீன தளபதியிடம் தோல்வி அடைந்தார்.
பாஞ்சோ
15. கனிஷ்கர்————என்ற சீன தளபதியை வெற்றி கொண்டார்.
பான்யாங் (பஞ்சோவின் மகன்)
16. சீன படையெடுப்பின் மூலம் கனிஷ்கர் வெற்றி கொண்ட பகுதிகள் என்னென்ன?
காஷ்கர்இ யார்க்கண்ட்இ கோட்டான்
17. நான்காவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்?
கனிஷ்கர்
18. கனிஷ்கரின் புத்த சமய சேவையின் பயனாக அவரை— என அழைத்தனர்.
இரண்டாம் அசோகர்
19. காந்தார சிற்பக்கலை யாருடைய காலத்தில் வளர்ச்சி அடைந்தது?
கனிஷ்கர்
20. இந்தியக் கலையும்இ கிரேக்க-ரோமானியக்கலை கூறுகளும் இணைந்த கலையே————கலை ஆகும்.
காந்தாரக்கலை
No comments:
Post a Comment