161. * நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!
162. * சாண்டி எனும் ஒருவகை சிவப்புக் கோழி பச்சை நிறத்தில் முட்டையிடும்!
163. * அன்னப்பறவை என்றாலே வெள்ளை நிறம்தான் நமக்கு நினைவு வரும். ஆனால், ஆஸ்திரேலியாவில் கருப்பு நிறத்தில் அன்னங்கள் வாழ்கின்றன!
164. * ஒரே மரத்தில் ராபின் பறவையும், அணிலும் சேர்ந்தே வாழும்.
165. * மைசூரிலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவிலுள்ள உயரமான நீர் வீழ்ச்சியாகும்.
166. * உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்கள் உள்ளன.
167. * இந்தியாவின் முதல் செல் தொலைபேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது.
168. * அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.
169. * திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.
170. * இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான பேர், எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர்.
171. * மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.
172. * லீவென் ஹாக் என்பவர் பாக்டீரியாவை 1682-ம் ஆண்டில் கண்டறிந்தார்.
173. * வில்லியம் ஹோவர்த் என்பவர் கார்ட்டூன் படங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
174. * மெக்சிகோ நகரம் ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட அளவு பூமிக்குள் இறங்குகிறது.
175. * அன்னத்தின் அறிவியல் பெயர்? - சிக்னஸ் அட்ராடஸ்.
176. * பிரமிடுகளில் மிகப்பெரியது? - குபு.
177. * சம்பா நடனம் புகழ்பெற்று விளங்கும் நாடு? - பிரேசில்.
178. * பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய உயிரினம்? - தும்பி.
179. * வாசனை பொருள்களின் ராணி? - ஏலக்காய்.
180. * ஒரு கனமில்லி லிட்டர் ரத்தத்தில் 50 லட்சம் சிவப்பணுக்கள் உள்ளன. ஒரு சிவப்பணு இறந்ததும் புதிய சிவப்பணு தோன்றிவிடும்.
No comments:
Post a Comment