SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்திடுக"நகமும் சதையும் போல
அ)ஒற்றுமை
ஆ)தீமை
இ)பகை
ஈ)இளமை
விடை : அ)ஒற்றுமை
112.'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"
இத்தொடரில் எதுகையைத் தேர்ந்து எழுதுக
அ)உடுக்கை - இழந்தவன்
ஆ)உடுக்கை - இடுக்கண்
இ)இழந்தவன் - ஆங்கே
ஈ)இடுக்கண் - நட்பு
விடை : ஆ)உடுக்கை - இடுக்கண்
113.இயைபைக் கண்டறிக்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே தெளிவு வேண்டும்
அ)மனதில் - தெளிவு
ஆ)வேண்டும் - வேண்டும்
இ)உறுதி -தெளிவு
ஈ)உறுதி - வாக்கினிலே
விடை : ஆ)வேண்டும் - வேண்டும்
114.'தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு
இத்தொடரில் எதுகையைத் தேர்ந்தெழுதுக
அ)தாளாண்மை - தகைமைக் கண்
ஆ)தாளாண்மை - தங்கிற்றே
இ)தாளாண்மை - வேளாண்மை
ஈ)வேளாண்மை - செருக்கு
விடை : இ)தாளாண்மை - வேளாண்மை
115.மோனையைக் கண்டெழுதல்
'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்"
அ)பொருள் - அல்லவரை
ஆ)பொருளாக - செய்யும்
இ)இல்லை - இல்லவரை
ஈ)பொருள் - பொருளாக
விடை : ஈ)பொருள் - பொருளாக
116.இயைபுத் தொடையினைத் தேர்க
'திங்கள்முடி சூழுமலை தென்றல விளையாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ் முனிவன் வாழுமலை
அ)திங்கள் முடி - தங்குபுயல்
ஆ)திங்கள் முடி - தென்றல்
இ)தங்குபுயல் -தமிழ்
ஈ)விளையாடுமலை - வாழுமலை
விடை : ஈ)விளையாடுமலை - வாழுமலை
117.இயைபுத் தொடையினைத் தேர்க
'மலைபட பொருள்க்ள யாவும் மலரென மணத்தை வீசும்
ஒலிகடல் வழங்கம் செல்வம் ஒங்கிய ஒளியை வீசும்"
அ)மலைபடு - மலரென
ஆ)மலலென - மனத்தை
இ)ஒலிகடல் - ஒங்கிய
ஈ)வீசும் - வீசும்
விடை : ஈ)வீசும் - வீசும்
118.எதுகையைக் கண்டெழுதுதல்
'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து"
அ)ஒறுத்தாரை - பொறுத்தாரை
ஆ)ஒறுத்தாரை - ஒன்றாக
இ)பொறுத்தாரை - பொன் போல்
ஈ)ஒன்றாக வையாரே
விடை : அ)ஒறுத்தாரை - பொறுத்தாரை
119.எதுகையைக் கண்டெழுதுதல்:
'ஈன்றுபுறந் தருத லென்றலைக் கடனே
சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே"
அ)ஈன்றுபுறம் -தருதல்
ஆ)ஈன்றுபுறம் - சான்றோன்
இ)தருதல் - என்தலைக்
ஈ)சாந்றோன் - ஆக்குதல்
விடை : ஆ)ஈன்றுபுறம் - சான்றோன்
120.'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்"
இத்தொடரில் மோனை அமைந்த சொற்கள்
அ)அருமை - பெருமை
ஆ)அருமை -அசாவாமை
இ)உடைதென்று - வேண்டும்
ஈ)பெருமை -முயற்சி
விடை : ஆ)அருமை -அசாவாமை



No comments:

Post a Comment