SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

8.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   இராஜபுத்திரர்களில் எத்தனை மரபுகள் இருந்தன?
36 மரபுகள்
2.   இராஜபுத்திர அரசுக்களில் காலத்தால் முந்தியது எது?
கூர்ஜர பிரதிகார அரசு
3.   கூர்ஜர பிரதிகார மரபில் முக்கிய தலைவன் யார்?
ஹரிஸ் சந்திரன்
4.   ஹரிஸ் சந்திரனின் தலைநகர் எது?
பின்மால்
5.   பிரதிகாரர்கள் மரபினை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் நாகபட்டர்
6.   முதலாம் நாகபட்டரின் தலைநகர் எது?
கன்னோசி
7.   முதலாம் நாகபட்டரின் முக்கிய வெற்றி எது?
அரேபியரை தோற்கடித்தது
8.   பிரதிகாரர் மரபில் புகழ்பெற்ற அரசன் யார்?
மிகரபோசர்
9.   மிகர போசர்————ஆண்டு முதல்————ஆண்டு வரை    ஆட்சி செய்தார்.
கி.பி.836 முதல் 885 வரை
10.    யாருடைய ஆட்சி காலத்தில் பிரதிகாரர்கள் அரசு மிக          உயர்நிலையை அடைந்தது.
மகேந்திர பாலன்
11.    மகேந்திர பாலனின் அவைப் புலவர் யார்?
இராஜசேகரர்
12.    இராஜ சேகரர் எழுதிய நூல்கள் எவை?
பால இராமாயணம்இ பாலபாரதம்
13.    பால இராமாயணம்இ பாலபாரதம் ஆகிய நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
சமஸ்கிருத மொழியில்
14.    சௌகான்கள் வம்சத்தின் தலைநகர் எது?
ஆஜ்மீர்
15.    சௌகான்கள் மரபில் புகழ்மிக்க அரசர் யார்?
விசால் தேவர்
16.    விசால் தேவர் யாரிடம் இருந்து தில்லியை கைப்பற்றினார்?
தோமரர்களிடம்
17.    சௌகான்கள் வம்சத்தின் கடைசி அரசர் யார்?
பிருதிவிராச சௌகான்
18.    பிரிதிவிராச சௌகானின் மனைவியின் பெயர் என்ன?
இராணி சம்யுக்தா
19.    இராணி சம்யுக்தா யாருடைய மகள் ஆவார்?
ஜெயசந்திரன்
20.    முதல் தரெயின் போரில் பிருதிவிராசர் யாரை    தோற்கடித்தார்?
முகமது கோரியை



No comments:

Post a Comment