TNPSC பொதுத்தமிழ்
61.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வலி வளி வழி
அ)வலிமை வெப்பம் போதல்
ஆ)வன்மை காற்று பாதை
இ)இடு வளித்தல் பாதை
ஈ)வலம் வளம் பாதை
விடை : ஆ)வன்மை காற்று பாதை
62.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தலை தளை தழை
அ)சினை வெட்டு தழை
ஆ)உறுப்பு கட்டு இலை
இ)முதல் ஒட்டு ஒலை
ஈ)செடி தட்டு வலை
விடை : ஆ)உறுப்பு கட்டு இலை
63.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
விலை விளை விழை
அ)பொருளின் மதிப்பு பயிர் மதிப்பு
ஆ)மதிப்பு விரும்பு வயல்
இ)மதிப்பு பயிராக்கு தோன்று
ஈ)எண்ணம் பயன் தோன்று
விடை : இ)மதிப்பு பயிராக்கு தோன்று
64.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
கரை கறை
அ)அழுக்கு ஒரம்
ஆ)கனைத்தல் கரைத்தல்
இ)ஒரம் அழுக்கு
ஈ)கரைத்தல் பிடித்தல்
விடை : இ)ஒரம் அழுக்கு
65.ஒலிவேறுபாடு அறிந்து சரியானைதை; தேர்க குற்றம் செய்ய ..... கொள்
அ)நானம்
ஆ)நாதம்
இ)நாணம்
ஈ)நாநம்
விடை : இ)நாணம்
66.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -ஆ
அ)ஆடு
ஆ)பசு
இ)ஆமை
ஈ)ஆலை
விடை : ஆ)பசு
67.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக - கோ
அ)தலைவன்
ஆ)கூலியாள்
இ)கோவலன்
ஈ)கோமளாளி
விடை : அ)தலைவன்
68.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக - நா
அ)நலம்
ஆ)நாளை
இ)நாக்கு
ஈ)நண்டு
விடை : இ)நாக்கு
69.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக - பை
அ)பாட்டு
ஆ)பண்
இ)பரிசு
ஈ)பசுமை
விடை : ஈ)பசுமை
70.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிகா - ஏ
அ)அம்பு
ஆ)வில்
இ)வாள்
ஈ)வேல்
விடை : அ)அம்பு
No comments:
Post a Comment