தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு
31.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)வெடியா உலர் சிறு கனி – கிளிமாட்டிஸ்
ஆ)வெடியா உலர் தானியம் - அந்தி மந்தாரை
இ)சிப்செலா – முந்திரி
ஈ)கொட்டை – ட்ரைடாக்ஸ்
விடை : அ)வெடியா உலர் சிறு கனி – கிளிமாட்டிஸ்
32.சோரோசிஸ் கனியின் மேற்புறத்தில் காணப்படும் முட்கள்
அ)சூழ்பை
ஆ)மகரந்த தூள்
இ)சூல்முடி
ஈ)சூலக இலை
விடை : இ)சூல்முடி
33.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)லொமெண்டம் - கொத்துமல்லி
ஆ)க்ரெமோகார்ப் - கருவேலம்
இ)ரெக்மா – அத்தி
ஈ)சோரேசிஸ் - பலா
விடை : ஈ)சோரேசிஸ் - பலா
34.கருவுற்ற சூல் -------- எனப்படுகிறது
அ)கனி
ஆ)விதை
இ)தோல்;
ஈ)காம்பு
விடை : ஆ)விதை
35.இவற்றில இருவித்திலை தாவரம் எது
அ)அவரை
ஆ)மக்காச்சோளம்
இ)நெல்
ஈ)காம்பு
விடை : அ)அவரை
36.இருவித்திலையின் தவறான கூற்று எது?
அ)விதையானது தடித்த இமுட்டை வடிவம் கொண்டு மெலிதாக ஒரு புறம் வளைந்து காணப்படும்
ஆ)இரு விதையுறையால் சூழப்படவில்லை கருவில் ஒரு மைய அச்சு உள்ளது
இ)கருஇவிதையுறையால் சூழப்பட்வில்லை கருவில் ஒரு மைய அச்சு உள்ளது
ஈ)சல்லி வேரின் நுனியானது வளர் துளையின் அருகில் அமைந்துள்ளது
விடை : ஈ)சல்லி வேரின் நுனியானது வளர் துளையின் அருகில் அமைந்துள்ளது
37.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)நெல் கனி – கார்யாப்சிஸ்
ஆ)நெல் கரு - ஸ்கூட்டல்லம்
இ)நெல் முளைக்குருத்து – ஆட்டோகேரி
ஈ)நெல் முளை வேர் - போலியோரைசா
விடை : இ)நெல் முளைக்குருத்து – ஆட்டோகேரி
38.டார்வின் இதனை கண்டறிந்தார்
அ)விதை உறைகளின் மூலக்கூற்றை கண்டறிந்தார்
ஆ)நன்னீரில் விதைகள் மிதப்பதை கண்டறிந்தார்
இ)கடல்நீரில் விதைகள் இறப்பதை கண்டறிந்தார்
ஈ)மிதவெப்பத்தில விதைகளை பதப்படுத்தும முறையை கண்டறிந்தார்
விடை : இ)கடல்நீரில் விதைகள் இறப்பதை கண்டறிந்தார்
39.கனிகளும் விதைகளும் பரவுவதேன்?
அ)ஓரெ இடத்தில் தாவர கூட்டங்களின் நெரிசலினால் ஏற்படும் போட்டியிலிருந்து விடுபட
ஆ)தாவர சிற்றனங்கள் வெற்றிகரமாகபரவ
இ)புவியில் தாவரங்கள் தங்களை நிலைநிறுத்த
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
40.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)ஆட்டோகோரி – விதை காற்றில் பரவுதல்
ஆ)அனிமோகோரி – விதை தானிய முறை பரவல்
இ)சூகோரி – விதை விலங்குகளால் பரவுதல்
ஈ)ஹைட்ரோககோரி – விதை மனிதர்களால் பரவுதல்
விடை : இ)சூகோரி – விதை விலங்குகளால் பரவுதல்
No comments:
Post a Comment