SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.இலக்கணக் குறிப்பபைத் தேர்ந்தெடுக்க ஊறுகாய்
அ)உம்மைத் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)வினைத் தொகை
ஈ)உவமைத் தொகை
விடை : இ)வினைத் தொகை
82.இலக்கணக் குறிப்பறிதல் 'கடி நகர்"
அ)பெயர்ச்சொல்
ஆ)உரிச்சொல் தொடர்
இ)வினைச் சொல்
ஈ)வினைமுற்று
விடை : ஆ)உரிச்சொல் தொடர்
83.இலக்கணக் குறிப்பு எழுதுக 'வெல்க"
அ)வினைச்சொல்
ஆ)வினைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஈ)வியங்கோள் வினைமுற்று
84.உறுபொருள் - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஆ)உரிச்சொற்றொடர்
இ)ஒரு பொருள் பன்மொழி
ஈ)வியங்கோள்வினைமுற்று
விடை : ஆ)உரிச்சொற்றொடர்
85.இலக்கணக் குறிப்பறிதல் : அறன் ஆக்கம்
அ)உம்மைத்தொகை
ஆ)எண்ணும்மை
இ)முற்றும்மை
ஈ)அடுக்குத் தொடர்
விடை : அ)உம்மைத்தொகை
86.அளவில்லா - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)உருவகம்
ஆ)வினையாலணயும் பெயர்
இ)ஒருபொருட் பன்மொழி
ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
87.விடைக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடு 'ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர்"
அ)இந்தியாவின் பிரதமர் யார்?
ஆ)இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
இ)இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார்?
ஈ)இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
விடை : ஈ)இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
88.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
இசையினைப் பண் என்னும் பெயரால சுட்டுவது பண்டைய வழக்கம்
அ)இசையினைப் பண் என்னும் பெயரால் சட்டுவதா பண்டைய வழக்கம்?
ஆ)இசையை எப்பெயரால் சுட்டுவது பண்டைய வழக்கம்?
இ)பண்டைய வழக்கம் இசையை எவ்வாறு சுட்டுவது?
ஈ)பண்டைய வழக்கப்படி பண் என்பதன் பொருள் யாது?
விடை : ஆ)இசையை எப்பெயரால் சுட்டுவது பண்டைய வழக்கம்?
89.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'ஊரோடு ஒத்து வாழ வேண்டும்"
அ)ஊரோடு ஒத்து வாழ வேண்டுமா?
ஆ)எவ்வாறு வாழ வேண்டும்?
இ)எதனோடு ஒத்து வாழ வேண்டும்?
ஈ)யாரோடு ஒத்து வாழ வேண்டும்?
விடை : ஆ)எவ்வாறு வாழ வேண்டும்?
90.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'குழந்தையைத் தாலட்டுவதும் கையற்றுக் கதறி அழுவதும்கூட வாய்மொழி இலக்கியமாகும்?
அ)குழந்தையைத் தாலட்டுவதும் கையற்றுக் கதறி அழுவதும்கூட  இலக்கியமாகும்?
ஆ)குழந்தையைத் தாலட்டுவது எவ்வகை இலக்கியமாகும்?
இ)கையற்றுக் கதறி அழுவது எவ்வகை இலக்கியமாகும்?
ஈ)வாய்மொழி இலக்கியம் என்று எதைக் கூறுவர்?
விடை : ஈ)வாய்மொழி இலக்கியம் என்று எதைக் கூறுவர்?



No comments:

Post a Comment