SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.மோனைச் சொற்களைக் குறிப்பிடுக
அ)மைந்த - ஏற்றம்
ஆ)கண்டார் - போனார்
இ)எடுத்த - எடுப்பில்
ஈ)நின்று - சென்றார்
விடை : இ)எடுத்த - எடுப்பில்
62.எதுகை அமைந்த சொற்களைக் குறிப்பிடுக
அ)சொல்லுக - வெல்லுக
ஆ)அச்சொல் - பிறிதொன்று
இ)போக்கிடம் - புழுமீன்
ஈ)புழுமீன் - வாழும்
விடை : அ)சொல்லுக - வெல்லுக
63.கீழ்க்காணும் பாடலடியில் மோனை சொற்களைக் கண்டறிக
போக்கிடம் இழந்து புழுமீன் வாழும்
அ)இழந்து - புழுமீன்
ஆ)போக்கிடம் - இழந்து
இ)போக்கிடம் - புழுமீன்
ஈ)புழுமீன் - வாழும்
விடை : இ)போக்கிடம் - புழுமீன்
64.கீழ்க்காணும் அடிகளில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
அறவொர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவொர்க்கு எதிர்தளுந் தொல்லோர் சிறப்பின்
அ)அறவோர்க்கு - துறவொர்க்கு
ஆ)அளித்தலும் - எதிர்த்தலுந்
இ)அந்தணர்  - தொல்லோர்
ஈ)ஒம்பலும் - சிறப்பின்
விடை : அ)அறவோர்க்கு - துறவொர்க்கு
65.கீழ்காணும் பாடலடியில் இயைபுச் சொற்களைக் கண்டு எழுதுக
தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே
அ)நிலத்தினிலே - மீதினிலே
ஆ)தத்துவ - சத்திய
இ)ஞானம் - வேதம்
ஈ)நின்று - நிழலத்தினிலே
விடை : அ)நிலத்தினிலே - மீதினிலே
66.கற்க கசடறக் கற்பவை கற்றவின் நிற்க அதற்குத் தக இத்தொடரில் மோனையைத் தேர்க
அ)கற்க - நிற்க
ஆ)கற்பவை - தக
இ)கற்றபின் - அதற்கு
ஈ)கற்க - கசடற
விடை : ஈ)கற்க - கசடற
67.இன்னகைத் தேகர்வாய் கிளவியும் அணங்கே நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே இத்தொடரிழல் காணப்படும் இயைபுத் தொடையைத் தோந்தெடு
அ)இன்னகை - கிளவியம்
ஆ)அணங்டகெ - அணங்கே
இ)துவர்வாய் - கிளவியும்
ஈ)நன்மாணமேனி - அணங்கே
விடை : ஆ)அணங்டகெ - அணங்கே
68.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க சிலப்பதிகாரம் முத்தமிழ்க காப்பியம் என்று போற்றப்படுகிறது
அ)எது போற்றப்படுகிறது
ஆ)எப்படிப போற்றப்படுகிறது?
இ)முத்தமிழ்க காப்பியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரமா?
ஈ)சிலப்பதிகாரம் எப்படிப் போற்றப்படுகிறது?
விடை : ஈ)சிலப்பதிகாரம் எப்படிப் போற்றப்படுகிறது?
69.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தவரா?
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்
70.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம் 



No comments:

Post a Comment