TNPSC பொதுத்தமிழ்
71.ஸ்டேஷனரி ஷாப் (Stationary Shop ) தமிழ்ச்சொல் தருக
அ)எழுதுபொருள் நிலையம்
ஆ)எழுது பொருளகம்
இ)எழுதுபொருள் அங்காடி
ஈ)எழுதுபொருள் மனை
விடை : இ)எழுதுபொருள் அங்காடி
72.'பஸ் ஸ்டாண்டு" (Bus Stand) என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)பஸ் நிலையம்
ஆ)பேருந்து ஸ்டாண்டு
இ)பதிவு போஸ்ட்
ஈ)பேருந்து நிலையம்
விடை : ஈ)பேருந்து நிலையம்
73.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கலை களை
அ)துன்பம் இன்பம்
ஆ)ஆடை நீக்கு
இ)மூங்கில் ஆடை
ஈ)அறிவியல் நீக்கு
விடை : ஆ)ஆடை நீக்கு
74.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைக் காண்க
குலவி குளவி குழவி
அ)வண்டு நெருங்கி கல்
ஆ)நெருங்கி வண்டு குழந்தை
இ)தூரம் வண்ணத்துப்பூச்சி மான்கன்று
ஈ)அருகில் தேன் பூனைக்குட்டி
விடை : ஆ)நெருங்கி வண்டு குழந்தை
75.ஒலி வேறுபாடறிக
அரம் அறம்
அ)இரும்புக் கருவி விருப்பம்
ஆ)திரவம் தர்மம்
இ)இரும்புக் கருவி தர்மம்
ஈ)இலை மலை
விடை : இ)இரும்புக் கருவி தர்மம்
76.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
கன்னி கண்ணி
அ)பழம் படம்
ஆ)பெண் ஆண்
இ)பெண் மாலை
ஈ)மணமாகாத பெண் மலர்மாலை
விடை : ஈ)மணமாகாத பெண் மலர்மாலை
77.ஒலிவெறுபாடநிந்து பொருள் தேர்க
ஆலி ஆளி ஆழி
அ)அமிர்தம் ஒளி வண்டி
ஆ)மழைத்துளி சிங்கம் மொதிரம்
இ)காற்று வளை கடல்
ஈ)தேனி வழு காடி
விடை : ஆ)மழைத்துளி சிங்கம் மொதிரம்
78.ஒலி வேறுபாடறிந்து பொருள் தேர்க
வெல்லம் வெள்ளம்
அ)இனிப்பு வகை நீர்ப்பெருக்கு
ஆ)கட்டி மட்பாண்டம்
இ)வெற்றி எண்ணை
ஈ)மரம் கள்ளம்
விடை : அ)இனிப்பு வகை நீர்ப்பெருக்கு
79.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக
'ஆ" என்ற ஒரெழுத்தின் பொருள்
அ)ஆடு
ஆ)அரசன்
இ)பசு
ஈ)கன்று
விடை : இ)பசு
80.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக 'பூ"
அ)குறிஞ்சி
ஆ)மல்லிகை
இ)முல்லை
ஈ)மலர்
விடை : ஈ)மலர்
No comments:
Post a Comment