SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்க
நல்ல பழக்கம் வாழ்வை உயர்த்தும்
அ)வாழ்வை உயர்த்த என்ன வழி?
ஆ)நாம் எதனைக் கடைபிடிக்க வேண்டும்?
இ)நல்ல பழக்கம் எதனை உயர்த்தும்?
ஈ)நல்ல பழக்கம் வளர என்ன செய்ய வேண்டும்?
விடை : இ)நல்ல பழக்கம் எதனை உயர்த்தும்?
52.விசயலட்சுமி வீணை வாசிக்கிறாள்
இவ்விடைக்கெற்ற சிரியான வினா யாது?
அ)விசயலட்சுமி எப்போது வாசிக்கிறாள் ?
ஆ)விசயலட்சுமி ஏன் வீணை வாசிக்கிறாள்?
இ)விசயலட்சுமி என்ன வாசிக்கிறாள்?
ஈ)விசயலட்சமி வீணை வாசிப்பாளா?
விடை : இ)விசயலட்சுமி என்ன வாசிக்கிறாள்?
53.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
சிலப்பதிகாரம் நாடக காப்பியம் எனப் போற்றபப்படுகிறது
அ)சிலப்பதிகாரம் யாரால் இயற்றப்பட்டது?
ஆ)சிலப்பதிகாரம் எங்ஙனம் போற்றப்டுகிறது?
இ)சிலப்பதிகாரம் எத்தகைய கருத்துக்களைக் கூறுகிறது?
ஈ)சிலப்பதிகாரம் சமண காப்பியமா?
விடை : ஆ)சிலப்பதிகாரம் எங்ஙனம் போற்றப்டுகிறது?
54.விடைக்கேற்ப வினாவைத் தேர்ந்தெடுத்தல் உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்று பாடியவர் பாரதி
அ)பாரதியார் பாடல் எந்த வகையைச்  சார்ந்தது?
ஆ)உயர்களிடத்தில அன்பு வேணும் என்று பாடியவர் யார்?
இ)பாரதியார் எந்த பாடலை பாடினார்?
ஈ)பாப்பா பாட்டை பாடியவர் யார்?
விடை : ஆ)உயர்களிடத்தில அன்பு வேணும் என்று பாடியவர் யார்?
55.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக
கணிப்பொறி அறிவியல் துறை வளர்ந்து வருகிறது
அ)எந்தத் துறை வளர்ந்து வருகிறது?
ஆ)கணிப்பொறி அறிவியல் வளர்ந்து வருகிறதா?
இ)கணிப்பொறி அறிவியல் வளரவில்லையா?
ஈ)கணிப்பொறி எனப்படுவது எது?
விடை : அ)எந்தத் துறை வளர்ந்து வருகிறது?

56.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
நட்டுவாக்காலி கடித்தால் குணமாக கொப்பரைத் தேங்காயை மென்று தின்ன வேண்டும்
அ)கொப்பரைத் ஏன் மெல்ல வேண்டும்?
ஆ)கொப்பரைத் தேங்காய் நல்ல நாட்டு மருந்தா?
இ)கொப்பரைத் தேங்காயினால் நோய் தீருமா?
ஈ)நட்டுவாக்கலி கடித்தால் குணமாக என்ன செய்ய வேண்டும்?
விடை : ஈ)நட்டுவாக்கலி கடித்தால் குணமாக என்ன செய்ய வேண்டும்?
57.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக்கூறுக
அமைச்சர் தொண்டர்களை தேர்தலுக்கு தயாராகும்படி கூறினார்
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : இ)பிறவினை வாக்கியம்
58.இளமையில் கல் எவ்வகை வாக்கியம் எனக் காண்க
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்
59.என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு - எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செய்திவாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
60.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
நீங்கள் இப்பொற்கிழியை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)அயற்கூற்று வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment